Monday, 18 November 2013

'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்...

'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்... !
                       



                              குருவாயூர்: தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் தேதி குருவாயூரில் திருமணம் நடைபெறுகிறது. குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.
ஸ்ரீசாந்த்தை மணக்கப் போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடப்படாமல் வைத்துள்ளனர்.

'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்... ! இருப்பினும் இது காதல் திருமணம் என்கிறார்கள்.
கடந்த 2006ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது அந்தப் பெண்ணும், ஸ்ரீசாந்த்தும் சந்தித்து காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த்துக்கு மேட்ச் பிக்ஸிங் சோதனை வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தாராம் இப்பெண். மேலும் தேவையான சட்ட உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தாராம். அந்தப் பெண் மட்டுமல்லாது, அவரது குடும்பமும் ஸ்ரீசாந்த்துக்கு ஆதரவாக இருந்ததாம். இதையடுத்து திருமணத்தை முடிவு செய்து விட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்