Wednesday, 27 November 2013

பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி !!!


    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. 

             மாணவர்கள் சாதனைகள் புரிவதற்கு தடைகளாக உள்ள மன அழுத்தம், பய உணர்ச்சி, முடிவு எடுத்தலில் தடுமாற்றம், நேர்மறை எண்ணங்களை உயர்த்துவது, தன்னைத்தானே உயர்ந்து கொள்ளுதல், ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிதல், மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஆளுமை திறன் ஆகிய திறன்களை வளர்ப்பதற்காக பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கல்வி அமலில் உள்ளது. 

             ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவிகளுக்கு வாழ்வியல் திறன்கள் குறித்த பயிற்சி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்