பீஜிங்: பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தொடர்ந்து சீனாவையும் ‘ஹையான்' புயல் தாக்கியுள்ளது. புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்சில் சுமார் 10 ஆயிரம் பேரை பலிவாங்கிய ஹையான் புயல், தற்போது சீனாவைத் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள் மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சான்லிசி நீர்த்தேக்க படகு விபத்திலும், தெற்கு சீனாவில் வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 8 பேர் பலியானதாக தெரிகிறது. சான்லி டவுன்ஷிப்பில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்த 1000க்கும் அதிகமான மாணவர்கள் இரண்டாவது மாடியில் பத்திரமாகத் தங்க வைக்கப் பட்டனர். அம்மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment