டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..
விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின் ‘கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
courtesy : tamil.oneindia.in
No comments:
Post a Comment