Saturday, 16 November 2013

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு வீட்டிற்குள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!!!


பல பேருக்கு உடற்பயிற்சி என்றால் ஏதாவது உடற்பயிற்சி மையத்திற்கு செல்லுதல் அல்லது காலையும் மாலையும் நடை பயிற்சி மேற்கொள்ளுதல் என்பதே. ஆனால் அது மட்டுமே உண்மையாகி விடாது. உடற்பயிற்சி செய்வதற்கு இன்னும் பல வழி முறைகள் உள்ளது. நம் வீட்டினுள்ளேயே பல உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம். சர்க்கரை நோய்க்காக வீட்டினுள் செய்யப்படும் உடற்பயிற்சிகள் பற்றி பலருக்கு தெரியாவிட்டாலும் அவைகள் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். உடற்பயிற்சி மையங்களுக்கு செல்வதை விட இந்த வழிமுறைகள் நல்ல பயன் அளிக்கும். உடற்பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கு நல்ல சிகிச்சையாக அமையும். ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்களின் முக்கிய தசைகள் அனைத்தும் செயலாற்றும்.
அதனால் இதயத் துடிப்பும் மேம்படும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். அதற்கு காரணம் இரத்த ஓட்டத்தில் இருந்து நேரடியாக க்ளுகாஸை உள்ளிழுத்து விடும். பொதுவாக உடற்பயிற்சியின் தாக்கம் 72 மணி நேரம் வரை நீடிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக உடற்பயிற்சியில் சீரான முறையில் ஈடுபட வேண்டும். சர்க்கரை நோய்க்கு வீட்டினுள் செய்யும் உடற்பயிற்சியை தவிர்க்க காரணங்கள் கூற முடியாது. ஏனென்றால் மழை வந்து விட்டது அல்லது இருட்டி விட்டது என்று அவ்வகை உடற்பயிற்சிக்கு காரணங்கள் காட்ட முடியாது அல்லவா? என்ன தான் வீட்டினுள் உடற்பயிற்சி செய்தாலும் கூட அது வெளியில் செய்வதை போல இருப்பதில்லை அல்லவா? அதனால் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். மேலும் மருத்துவ ஆலோசகரிடம் பாதுகாப்பு குறித்து அறிவுரை வாங்கிக் கொள்வதும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகும். சரி சர்க்கரை நோய்க்காக வீட்டினுள் செய்யப்படும் சில உடற்பயிற்சிகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? அவைகளை பின்பற்றி மாற்றங்களை உணருங்கள் நண்பர்களே!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்