தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
Saturday, 30 November 2013
அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம் !!!
தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,'' என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது !!!
சிவில் சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும், மே மாதம் நடந்தது. இதை, ஒன்பது லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து, மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை தொடர்ந்து நடக்கிறது. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தாள்களை எழுதுவர். நாடு முழுவதும், 16 ஆயிரம் பேர், மெயின் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 2,000 பேர் எழுதுகின்றனர்.
சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி - தி தமிழ் ஹிந்து கட்டுரை !!!
அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!!!
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
BSNL Bill Discount 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி !!!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி
குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.
குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Thursday, 28 November 2013
மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!!!

சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி !!!
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் தேர்வு ஹால்டிக்கெட், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த தேர்வு முடிவு நகல், பணிநியமன ஆணையை காண்பித்து சான்றை பெற்று செல்கின்றனர்.வரும் 30ம் தேதி வரை ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்
பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களது விடைத்தாள் நகல்கள் examsonline.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் அக்டோபர் 2013 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் உள்ள டிஎம்ஆர் கோட் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கோரிய தேர்வர்கள் மட்டும், அதை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில் நவம்பர் 28 முதல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் டிசம்பர் 2, 3 தேதிகளில் மட்டும் நேரில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்து
Wednesday, 27 November 2013
SSA சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.
இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்
பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி !!!
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
மாணவர்கள் சாதனைகள் புரிவதற்கு தடைகளாக உள்ள மன அழுத்தம், பய உணர்ச்சி, முடிவு எடுத்தலில் தடுமாற்றம், நேர்மறை எண்ணங்களை உயர்த்துவது, தன்னைத்தானே உயர்ந்து கொள்ளுதல், ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிதல், மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஆளுமை திறன் ஆகிய திறன்களை வளர்ப்பதற்காக பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கல்வி அமலில் உள்ளது.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவிகளுக்கு வாழ்வியல் திறன்கள் குறித்த பயிற்சி நடந்து வருகிறது.
இது தான் கலிகாலம் போல இருக்கு பாஸ்! மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி
தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி
"சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: "கணினி மேம்பாட்டுக்காக தொழில்நுட்ப பூங்காக்களும், செயல் உருவாக்க மையங்களையும், மத்திய அரசு துவங்கியுள்ளது. இவை பெரும்பாலும் தனியாகவோ, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலோ அமைக்கப்பட்டுள்ளன. கணினி மேம்பாட்டு ஆய்வுகளை இப்பகுதிகளுக்கு சென்று செய்து வருகின்றனர். இது போன்ற மையங்கள் தமிழகத்தில் சென்னை தரமணி, சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், திருப்பெருந்துறை கொங்கு பொறியில் கல்லூரி ஆகியவற்றில் உள்ளன.
Tuesday, 26 November 2013
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள் !!!
தனித்தேர்வர்கள் , இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29 - ந்
தேதி கடைசிநாள் * 
278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு: குரூப் - 4 நிலையில், இன்னும், 222 பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதை நிரப்ப, ஐந்தாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் விவரம், http://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் கல்வியாண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை தமிழ்நாடுஅரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும்: ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
அண்ணாமலைப் பலகலைக்கழக சட்டம் 2013 Act-ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தமிழ்நாடு அட்மிஷன் இன் புரபஷனல் எஜூகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் (Tamil Nadu Admission in Professional Institutions Acy-2006) படி தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும். மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
Sunday, 24 November 2013
National Means Cum Merit scholarship Examination (NMMS) Dec - 2012 Result
National Means Cum Merit scholarship Examination (NMMS) Dec - 2012 Result
Click
Here... NMMS Examination result
NMMS Examination selected Students List Click Here
Here... NMMS Examination result
NMMS Examination selected Students List Click Here
EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?
EMIS - Offline Photo Resize Tutorial
உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: முதல்வர் ஜெயலலிதா உறுதி...!!!
மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34-வது வருட பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் அறிவுசார் தலைநகராக தமிழகம் உருமாறி வருகிறது என்றும், இதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்ற அவர், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34-வது வருட பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் அறிவுசார் தலைநகராக தமிழகம் உருமாறி வருகிறது என்றும், இதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்ற அவர், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல், மன அழுத்தம், தேர்வு பயம், மாணவர், ஆசிரியர் உறவில் விரிசல் உட்பட பல்வேறு பிரச்னைகளை தடுக்க நடமாடும் கவுன்சிலிங் குழுவை அரசு ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் மனநல நிபுணர் தலைமையில் மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது
Saturday, 23 November 2013
24.11.2013 அன்று தமிழ் நாடு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல்
Thursday, 21 November 2013
EMIS - Photos Ready within One Second.
EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட, ஒரே நொடியில் தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - என்றும் அன்புடன் பாடசாலைclick here to down load
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்
குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு
30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.
குரூப்-1 தேர்வு
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
போட்டிக்கு காரணம்
இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும்,
Tuesday, 19 November 2013
மத்திய பல்கலை துணைவேந்தர் நியமனம் - இனி கட்-ஆப் வயது உண்டு
இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
நாட்டில் மொத்தம் 44 மத்திய பல்கலைகள் உள்ளன. இந்த புதிய முடிவு,
கடந்த 2009ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 12 மத்திய பல்கலைகளில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. ஏனெனில், இப்பல்கலைகளுக்கு, 5 ஆண்டுகள் பதவி காலத்திற்கு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் அனைவரின் பதவி காலமும், 2014ம் ஆண்டு மார்ச் 1ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, ஓய்வுபெறும் அவர்கள், வயது காரணமாக மீண்டும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
முந்தைய ஆண்டுகளில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 70 வயதை அடைந்தவுடன் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன், துணைவேந்தர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்கள்.
ஆனால், தற்போது வயது கட்-ஆப் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒவ்வொரு துணை வேந்தரும் தங்களின் 5 ஆண்டு பதவி காலத்தை பிரச்சினையின்றி நிறைவுசெய்ய முடியும். இதன்மூலம், தாங்கள் செய்ய நினைத்ததையும் மேற்கொள்வதற்கான காலஅவகாசம் கிடைக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவும், எதிர்ப்பும்...
இந்த புதிய முடிவிற்கு, எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத சில மத்திய பல்கலைகளின் துணைவேந்தர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
அவர்கள் கூறியதாவது:
இந்த புதிய முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், வெறும், 3 அல்லது 4 ஆண்டுகள் வாய்ப்பு கிடைப்பதால், ஒரு துணைவேந்தர், கல்வி நிறுவன கட்டுமானத்தில் கவனம் செலுத்திவிட முடியாது.
உதாரணமாக, மாநில பல்கலைகளில், 3 வருடங்களுக்கு துணைவேந்தர் பதவி பெற்றவர்கள், தங்களின் முதல் வருடத்தில், பல்கலைக்கழக அமைப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். இரண்டாம் ஆண்டில், சில நல்ல பணிகளை மேற்கொள்ள துவங்குகிறார்கள். மூன்றாமாண்டில், பதவி நீட்டிப்பு பெற முயல்கிறார்கள்.
இதுதான் நடக்கிறது என்கின்றனர் இந்த முடிவை ஆதரிப்பவர்கள்.
இதை எதிர்ப்பவர்கள் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். "இந்த புதிய முடிவால், தற்போது மத்திய பல்கலைகளில் பதவியில் இருக்கும் துணை வேந்தர்களில், பாதி அளவினர், மீண்டும் பதவி நீட்டிப்பு வாய்ப்பினை பெற முடியாது. புதிதாக அமைக்கப்பட்ட 12 மத்திய பல்கலைகளில், பெரும்பாலானவற்றுக்கு நிலையான வளாகங்கள் இல்லை.
எனவே, அவற்றின் துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்பு பெற்றால், நிலையான வளாகம் அமைக்கும் பணியை கவனம் செலுத்தி நிறைவுசெய்ய முடியும்" என்பது அவர்களின் கருத்து.
அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "10,11,12ம்வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ இடைத்தேர்வுகள் இன்று(நேற்று) துவங்கி உள்ளன. இத்தேர்வு முடிந்து பாட ஆசிரியர் அந்த விடைத்தாளை திருத்தியபின் சில மாணவர்களின் வினாத்தாள் திருத்தப்பட்டதை தலைமையாசிரியர் மீண்டும் சரிபார்ப்பார்.
இடைத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சியளிக்கப்படும்.
அரையாண்டுத்தேர்வில் குறைவான தேர்ச்சிபெறும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2வது வாரத்தில் பயிற்சியளிக்கப்படும்.
அரையாண்டுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களை இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கும் நோக்கில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் ஒன்றிய வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவ.,24ல் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை அரசு கல்வி உதவி கிடைக்கும்" என்றார்.
அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!
மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் பாடங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேற்பார்வை செய்தார். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறினார்.
மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதாகவும், 8-வது இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தை 5-வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்காக மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிட்டார். மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியாவது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளிகல்வித்துறை தொடர்பாக மதுரை மாவட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்கவும், டி.இ.டி(ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் பெயிலானதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டியலையும் கேட்டு பெற்றுக்கொண்டார். இந்தத் தேர்வினால் தமிழகம் முழுவதும் சுமார் 490 பேர் ஆசிரியர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இயக்குனரின் திடீர் ஆய்வால் கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்
Monday, 18 November 2013
தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது.
இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட அளவில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!
கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை. ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. மேலும் இவற்றை உட்கொண்டால் 72 மணிநேரத்திற்கு காதல் வாழ்க்கையில் ஈடுபடலாம்.
இருப்பினும், இப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு எடுத்து கொள்ளும் ஒன்று தான் கருத்தடை மாத்திரை. இப்படி எடுத்துக் கொள்ளும் போது ஒருசில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
அதிலும் இவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதோடு, கருச்சிதைவின் அளவு அதிகரிக்கும். இதனால் நாளடைவில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைப் பார்ப்போம்.
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
இயற்கை வைத்தியம் என்று சொன்னால், அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது. அதிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், விரைவில் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதென்ன நிமோனியா என்று கேட்கலாம்.
பணம் பெற்றுக் கொண்டு விளையாடிய சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா?: ஐ. ஜ.தளம் கேள்வி
டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..
விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின் ‘கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
courtesy : tamil.oneindia.in
'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்...
குருவாயூர்: தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் தேதி குருவாயூரில் திருமணம் நடைபெறுகிறது. குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.
ஸ்ரீசாந்த்தை மணக்கப் போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடப்படாமல் வைத்துள்ளனர்.
குரூப் - 2 தேர்வு எழுதுவதை தடுப்பதற்கு கட்டாய பணி ஒப்பந்தம்!!!
குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நில அளவைத் துறையானது சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலத்தை கொண்டுள்ளது. மாவட்டந்தோறும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுகிறது. அரசு, தனியார் நிலம், கட்டடங்களை அளவீடு செய்து, பட்டா, சிட்டா, அ பதிவேடு, புலப்பட நகல், பத்திரம், உயில், பவர் பத்திரம், பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த் துறையின் ஆவணங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
90 நாள் பயிற்சி
90 நாள் பயிற்சி
குழந்தைகளுக்கான தண்டனை: பள்ளி, வீடுகளில் தொடர்கிறது வன்முறை
"பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகளில் மாற்று முறைகளை கையாள வேண்டும்" என, குழந்தைகளுக்கான நலக்குழுமம் தெரிவித்துள்ளது.
பள்ளி, வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் அடிப்பது (கார்போரல் பனிஷ்மென்ட்) போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, என தெரிவிக்கப்பட்டது.
பள்ளி, வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் அடிப்பது (கார்போரல் பனிஷ்மென்ட்) போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, என தெரிவிக்கப்பட்டது.
Sunday, 17 November 2013
மழையர் பள்ளி ஆசிரியர் பணி மகத்தானது
ஒரு குழந்தை வளர்ந்து, படித்து, பட்டங்கள் பல பெற்றாலும், அதற்கு அடித்தளம் இடப்படுவது மழையர் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் தான். இதிலும், ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக பல குழந்தைகள் மழலையர் பள்ளியில் தான் தங்களின் கல்வியை துவக்குகின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மழையர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவது என்பது எத்தனை மகத்தானது.
குழந்தைகள் வளர வளர சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கல்வி கற்கத் துவங்குவர். ஆனால், மழலையாக இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றே அறியாத வயதில், மழையர் பள்ளிகளில் கால் வைக்கும் போது, அந்தக் குழந்தையை பள்ளிக்கூடம் வர வழைக்க வேண்டிய விருப்பத்தை ஏற்படுத்த வேண்டியதும், பள்ளியிலேயே வீட்டுச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியதும், மழலையர் பள்ளி ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.
சச்சின், சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம் முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.
அனைவரையும் கலங்க வைத்த சச்சினின் உருக்கமான பேச்சு!!!
கண்ணீருடன் விடை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...
மும்பை: தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த சச்சின், வான்கடே மைதானத்தில் கடைசி முறை பேசியது அனைவரின் கண்களையும் குளம் ஆக்கியது.
இதுவரை எந்த வீரரும் இப்படி பேச்சை பேசியதில்லை. அவருடைய இன்றைய பேச்சு, அவர் மீண்டும் அணியில் விளையாட மாட்டார் என ஏங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சச்சின் பேசியது பின்வருமாறு:
' இந்த தருணத்தில் என் அப்பா இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. அவருக்கு தான் என் முதல் நன்றி, 1999ஆம் ஆண்டு உலககோப்பையின் அவரது மறைவு செய்தி என்னை அதிர வைத்தது. அவர் எப்போதும் என்னை விட்டு கொடுக்க மாட்டார். எதற்கும் உன் லட்சியத்தை விட்டு கொடுக்காதே என்று என்னிடம் கூறுவார். அவரை இன்று ரொம் மிஸ் பண்ணுறேன்.
அம்மாவின் பிரார்த்தனை
என் அம்மாவின் பொறுமைக்கு நான் அடிமை,
பள்ளி, கல்லூரி மாணவிகள் பயணம் செய்ய சிறப்புப் பேருந்து...!!!
மாணவர் சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மாணவ மாணவிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக மாணவர் சிறப்பு பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 46 பஸ்களும், காரைக்காலில் 13 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம்
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.windows xp சேவையினை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு.... நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட்கம்ப்யூட்டர் நிறுவனத்தின்அலுவலக பயன்பாட்டு, மென்பொருளான, 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, நம் நாட்டின், 34 ஆயிரம் வங்கிகளும் பயன்படுத்தி வருகின்றன
Saturday, 16 November 2013
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு வீட்டிற்குள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!!!
பல பேருக்கு உடற்பயிற்சி என்றால் ஏதாவது உடற்பயிற்சி மையத்திற்கு செல்லுதல் அல்லது காலையும் மாலையும் நடை பயிற்சி மேற்கொள்ளுதல் என்பதே. ஆனால் அது மட்டுமே உண்மையாகி விடாது. உடற்பயிற்சி செய்வதற்கு இன்னும் பல வழி முறைகள் உள்ளது. நம் வீட்டினுள்ளேயே பல உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம். சர்க்கரை நோய்க்காக வீட்டினுள் செய்யப்படும் உடற்பயிற்சிகள் பற்றி பலருக்கு தெரியாவிட்டாலும் அவைகள் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். உடற்பயிற்சி மையங்களுக்கு செல்வதை விட இந்த வழிமுறைகள் நல்ல பயன் அளிக்கும்.
உடற்பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கு நல்ல சிகிச்சையாக அமையும். ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்களின் முக்கிய தசைகள் அனைத்தும் செயலாற்றும்.


Download the apps of VOICE OF TEACHERS
You can download the android apps of voice of Teachers click to down load the android apps of voice of teachers to your mobile phone
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் !!!
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் !!!
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு !!!
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.
அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Friday, 15 November 2013
Reoption
For exercising re-option to see the GO.240 DT.22.07.2013 CLICK THE LINK GO.240 DT 22.07.2013
ஆன்லைனில் விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு புது அறிவிப்பு
பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு, மார்ச் ஏப்ரலில் நடைபெறும் இடைநிலை மற்றும் மேல்நிலை பொது தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில், 15ம் தேதி (இன்று) முதல், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், 15ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி வரும், "18ம் தேதி முதல், 29ம் தேதி வரை" என, மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Click here for the link
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும். இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.
16,624 ஆசிரியர்கள் விரைவில் நியமனம், பள்ளிக்கல்விச் செயலர்
SG Asst Teacher Post - 1,821 ( DTEd Qualified Hands with TET Paper 1 Passed Candidates)
BT Asst Teacher Post - 11,922 ( UG + BEd Qualified Hands with TET Paper 2 Passed Candidates)
PG Asst Teacher Post - 2,881 ( PG + BEd Qualified Hands with PG TRB Selected Candidates
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார். சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா 14.11.2013 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் அவர் பேசியது:
சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க, மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன. தமிழகத்தில், ஏறக்குறைய 100 பள்ளிகள், தற்போதைய வளாகங்களிலேயே CBSE பள்ளிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே, பல தனியார் பள்ளிகள் அதிக கட்டணங்களை வசூலித்து கொள்ளையடிக்க, CBSE திட்டத்திற்கு மாறிவிட்டன.
40 சதவீத மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்' திட்டத்தால் அவதி
மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். "அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், இடைநிற்றல் தடுப்பதற்காக, கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் அடிப்படை கல்வித்திறன் முற்றிலும் பாதிக்கப்படுவதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநில கல்வித்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மதிப்பெண், தேர்வு என்ற நோக்கத்தில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், எவ்வித பயமும் இன்றி, ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளை மிக எளிதாக கடந்து வரும் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மிகுந்த சிரமம் கொள்கின்றனர். பொதுத்தேர்வுக்கு தயாராகும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வெறும் ஆறு மாதங்களே கற்பித்தல் பணி நடக்கிறது. மீதம் உள்ள நாட்களில் மாதிரி தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துகின்றனர். ஒன்பதாம் வகுப்பு முடித்து, எவ்வித அடிப்படை கல்வித்திறனும் இன்றி 10ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி என்ற பெயரில் எழுதுவது, வாசிப்பது என்று உயர்நிலை ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கவேண்டிய அவலநிலை உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை
Tuesday, 12 November 2013
அண்ணாமலை பலகலைக்கழகம் டிசம்பர் - 2013 தேர்வு அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.
CLICK HERE TO VIEW TIME TABLE DECEMBER - 2013 ANNAMALAI UNIVERSITY.
CLICK HERE TO MAY/JUNE EXAM RESULTS- 2013http://annamalaiuniversity.ac.in/distance_exam.htm
http://annamalaiuniversity.ac.in/distance_exam.htm
http://annamalaiuniversity.ac.in/distance_exam.htm
தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்
இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. 1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத்.
மனித கண்ணின் இந்த படத்தை பார்த்திருக்கிங்களா?
நம் உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண் தான் இது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் மனித கண்ணின் மிகப்பெரும் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறிர்களா நண்பரே இல்லை எனில் இங்கே பாருங்கள். இந்த படங்கள் தான் மனித கண்ணின் மிகப்பெரும் படங்கள் ஆகும் எனலாம் இதுவரை எடுக்கப்பட்ட மனித கண்ணின் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய படங்கள் ஆகும்...
தொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள்
பீஜிங்: பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தொடர்ந்து சீனாவையும் ‘ஹையான்' புயல் தாக்கியுள்ளது. புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்சில் சுமார் 10 ஆயிரம் பேரை பலிவாங்கிய ஹையான் புயல், தற்போது சீனாவைத் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள் மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சான்லிசி நீர்த்தேக்க படகு விபத்திலும், தெற்கு சீனாவில் வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 8 பேர் பலியானதாக தெரிகிறது. சான்லி டவுன்ஷிப்பில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்த 1000க்கும் அதிகமான மாணவர்கள் இரண்டாவது மாடியில் பத்திரமாகத் தங்க வைக்கப் பட்டனர். அம்மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு மாற்றம் எனவே மொஹரம் பண்டிகை விடுமுறை வரும் 15ம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Equivalence of Degree - Orders – issued.
Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.
G.O228
மாணவர் சேர்க்கையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா, பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு முதலிடம்: 418 பேர் உடல் உறுப்பு தானம்
சென்னை: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. நம் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 533 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் 67, 757 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளில் இறப்போரின் சதவிகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம். அவ்வாறு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டம் 1/5 மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைபவர்களின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டில் மாநில அரசு அறிமுகப்படுத்தியது
காமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்- சட்டசபையில் மீண்டும் தீர்மானம்!

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவில் கூட இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி
குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த (டிசம்பர்) மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும். இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள். தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது. அடுத்த மாதம் முடிவு வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
Monday, 11 November 2013
தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து
நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த் தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014. கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது தொலைநிலை பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழங்கப்படும் படிப்பு: பி.எட். காலம்: 2 ஆண்டுகள் தகுதி : குறைந்தது 2 வருட ஆசிரியப் பணி அனுபவம் இருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை பொருளியல் மற்றும் வணிகவியல் படித்தவர்கள் இளநிலையிலும் அதே படிப்பை படித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை : நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014. மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.
மாதிரி பள்ளிகள் விவகாரத்தில், தமிழகத்தி்ற்கு பயன் அளிக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு முந்தைய திமுக அரசுதான் ஒப்புதல் அளித்தது என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என்ற பழமொழிக்கேற்ப, தான் ஆட்சியில் இருந்த போது தன்னலத்திற்காக மத்திய அரசின் 'ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்யாலயா' திட்டம் குறித்து வாய்மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவு தெரிவித்து, அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திவிட்டு, இப்போது "மத்திய அரசுக்கு மறுப்புத் தெரிவிக்க மாநில அரசு முன் வருமா?" என்ற தலைப்பிலே மாநில சுயாட்சி குறித்து கருணாநிதி நீட்டி முழக்கி அறிக்கை வெளியிட்டு இருப்பது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.
"அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது"
"அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. அதை பயன்படுத்துவோரின் கையில் தான் ஆக்கமும் அழிவும் இருக்கிறது" என, "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசினார். கோவை மாவட்ட அளவிலான 21வது குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாடு சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் நடந்த இந்த மாநாட்டில்,
பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு
தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போட்டோக்களை கல்வித் தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சுய விபரங்களுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக
Saturday, 9 November 2013
01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு
முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!!!!........
"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.
சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்
அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.
ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.
இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20 நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது
. ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.
உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும்.
ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டு வருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
போலீஸ் சோதனையில் பேப்பர் இல்லையா? இன்சூரன்ஸ் தகவலை எஸ்எம்எஸ்சில் பெறலாம்
போலீசில் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும். இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:
Thursday, 7 November 2013
நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம்
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் மாணவர் தகவல் தொகுப்பு மூலம் மாணவ மாணவியரின் விபரத்தை அதிகாரிகள் எந்த ஒரு கல்வி அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அரசின் திட்டங்கள் முறையாக மாணவ
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஊர்ப்புற நூலகங்கள்பகுதி நேர நூலகங்கள், என மொத்தம் 117 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 1.21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலகங்களில் 20 லட்சத்து 66 ஆயிரத்து 587 நூல்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 41 ஆயிரத்து 879 வாசகர்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தி படித்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எத்தனை பேருக்கு அரசு பணி வாய்ப்பு?
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது. டி.இ.டி., முதல் தாள் தேர்வில் 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில் 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி 10,500 இடங்கள் காலியாக உள்ளன
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) அறிந்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும்
Wednesday, 6 November 2013
"தியானத்தின் பலன்கள்":-
1) வியாதிகளிலிருந்து நிவாரணம் 2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல். 3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல் 4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல் 5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல். 6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல். 7) ஞாபக சக்தி அதிகரிப்பு. இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல். 9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல். 10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல். 11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல். 12)எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல். மாணவ, மாணவியருக்கு: 1) உடல் ஆரோக்கியம் அடையும். 2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும். 3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும். 4) ஞாபக சக்தி வளரும். 5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும். 6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும். 7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும். உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும். 9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். 10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும். 11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது. 12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும். 13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும். கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம் 1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும். 2) மன வலிமை, மன அமைதி ஏற்படும். 3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும். 4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம். 5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்." Thank"s to Anand Sam வாழ்க வளமுடன் YOURS VAAZHGA VALAMUDAN B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A., M.A(YOGA) GRADUATE TEACHER GHS GANGALERI 635 122 KRISHNAGIRI - DT CELL : 99943-94610
4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தமிழக முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
4 பெட்டிகளுடன் இன்று சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
நடைபெற்றது. இதை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையில் இந்த சோதனை ஓட்டம்
நடைபெற்றது.
ஜெயலலிதா வருகை தந்ததால் அவரைக் காணவும், சோதனை ஓட்டத்தைக் காணவும்
பெருமளவில் மக்கள் திரண்டு விட்டனர்.
‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ திரு பழனிவேல்
கனவு ஆசிரியர்’ என்ற பெயரில் எம். ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை
சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப்
பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திரு பழனிவேல் அவர்களைப்
பற்றியதாகும்.
இவரை ‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ என்று சுட்டி-விகடன் பாராட்டுகிறது.
வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில்
சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பழனிவேல். அதன்படி ஒவ்வொரு
மாதமும் தூய்மையான வகுப்பறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வகுப்பு
மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை அறிவிப்புப் பலகையில் ஓட்டுகிறார்.
பள்ளியில் தையல் மெஷின் ஒன்று உண்டு. மாணவர்களின் சட்டையில் தையல்
பிரிந்திருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, உடனடியாக இத்தையல் மெஷின்
இயக்கப்பட்டு குறை தீர்க்கப்படும்.
மாணவிகளுக்கு நாப்கின்கள்
வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சைக்கிள்கள்
பஞ்ச்சர் ஆனாலும் கவலை இல்லை. அதற்கும் காற்றடிக்கும் பம்ப், பங்ச்சர்
ஓட்டும் பேஸ்ட் எல்லாம் இப்பள்ளியில் உண்டு.
இன்னும் எத்தனையோ
பழனிவேல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். எதிர்வரும் நாளில் அவர்களும்
சுட்டிவிகடன் மூலமோ வேறுவழிகளிலோ வெளிப்படலாம். அவர்கள் எல்லோருக்கும்
எனது முன்கூட்டிய வணக்கங்கள்!
கனவு ஆசிரியர்’ என்ற பெயரில் எம். ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை
சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திரு பழனிவேல் அவர்களைப் பற்றியதாகும்.
இவரை ‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ என்று சுட்டி-விகடன் பாராட்டுகிறது.
வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பழனிவேல். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வகுப்பு மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை அறிவிப்புப் பலகையில் ஓட்டுகிறார்.
பள்ளியில் தையல் மெஷின் ஒன்று உண்டு. மாணவர்களின் சட்டையில் தையல் பிரிந்திருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, உடனடியாக இத்தையல் மெஷின் இயக்கப்பட்டு குறை தீர்க்கப்படும்.
மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சைக்கிள்கள் பஞ்ச்சர் ஆனாலும் கவலை இல்லை. அதற்கும் காற்றடிக்கும் பம்ப், பங்ச்சர் ஓட்டும் பேஸ்ட் எல்லாம் இப்பள்ளியில் உண்டு.
இன்னும் எத்தனையோ பழனிவேல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். எதிர்வரும் நாளில் அவர்களும் சுட்டிவிகடன் மூலமோ வேறுவழிகளிலோ வெளிப்படலாம். அவர்கள் எல்லோருக்கும் எனது முன்கூட்டிய வணக்கங்கள்!
சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திரு பழனிவேல் அவர்களைப் பற்றியதாகும்.
இவரை ‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ என்று சுட்டி-விகடன் பாராட்டுகிறது.
வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பழனிவேல். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வகுப்பு மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை அறிவிப்புப் பலகையில் ஓட்டுகிறார்.
பள்ளியில் தையல் மெஷின் ஒன்று உண்டு. மாணவர்களின் சட்டையில் தையல் பிரிந்திருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, உடனடியாக இத்தையல் மெஷின் இயக்கப்பட்டு குறை தீர்க்கப்படும்.
மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சைக்கிள்கள் பஞ்ச்சர் ஆனாலும் கவலை இல்லை. அதற்கும் காற்றடிக்கும் பம்ப், பங்ச்சர் ஓட்டும் பேஸ்ட் எல்லாம் இப்பள்ளியில் உண்டு.
இன்னும் எத்தனையோ பழனிவேல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். எதிர்வரும் நாளில் அவர்களும் சுட்டிவிகடன் மூலமோ வேறுவழிகளிலோ வெளிப்படலாம். அவர்கள் எல்லோருக்கும் எனது முன்கூட்டிய வணக்கங்கள்!
தமிழ் நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் குடியாத்தம் வட்டத்தின் சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
தமிழ் நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் குடியாத்தம் வட்டத்தின் சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
அரசினர் மேல் நிலைப்பள்ளி தட்டப்பாறையில் 26.10.2013 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி,மிதி வண்டி வழங்கும் விழாவின் போது மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் குடியாத்தம் வட்டத்தின் பொருளாளர் திரு,A .திருஞானசம்பந்தம் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரசினர் மேல் நிலைப்பள்ளி தட்டப்பாறையில் 26.10.2013 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி,மிதி வண்டி வழங்கும் விழாவின் போது மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் குடியாத்தம் வட்டத்தின் பொருளாளர் திரு,A .திருஞானசம்பந்தம் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tuesday, 5 November 2013
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் .http://www.trb.tn.nic.in/Default.htm
முதல் தாள் முடிவு தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.trb.tn.nic.in/TET2013/05112013/msg.htm
இரண்டாம் தாள் முடிவு தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.trb.tn.nic.in/TET2013/05112013/msg1.htm
முதல் தாள் முடிவு தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.trb.tn.nic.in/TET2013/05112013/msg.htm
இரண்டாம் தாள் முடிவு தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.trb.tn.nic.in/TET2013/05112013/msg1.htm
Monday, 4 November 2013
சைபர் குற்றங்களைத் தடுப்பதெப்படி? ஹன்ஸா
பொதுவாக ஒருவர் மீது அவதூறு
சொல்லப்பட்டால் அது பொய் எனில் அவர் மீது மான நட்ட வழக்கு தொடர முடியும்.ஆனால், இணையத்தில் அவதூறு சொல்லப்பட்டால், அந்த இணையதள உரிமையாளர் மீதுதான் வழக்கிட
முடியும்.
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா"
திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ,
பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும்,
ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற
விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில்
மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க்
போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு
வருகிறது.இதன்மூலம்,
ஆன்-லைனில் விற்கப்படும் இலவச மடிக்கணினிகள்
அலிகார்: உத்தர பிரதேச மாநிலத்தில்
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப் டாப் கம்ப்யூட்டர்கள்
இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள்:
1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை
அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம்
மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்
மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற
பெயரில் ஒரு மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக்
குழந்தைகளின் ஏற்றத்தாழ்வற்ற கல்வி உரிமையைக் கொச்சைப்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மக்கள் பணத்தை விழுங்க உதவும் கல்வி உரிமைச்
சட்டம் என்பதாக ஒன்றைக் கொண்டுவந்தது இந்த அரசு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி
மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க /
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட
அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
HRSS HM Panel Preparation Instruction & Forms as on 01.01.2014
HRSS HM Panel Preparation Instruction & Forms as on 01.01.2014https://sites.google.com/site/padasalai6/panel-2014/HRSS%20HM%20Panel%201.1.2014.pdf?attredirects=0&d=1
மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி
பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356
பள்ளிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய
பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது
கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sunday, 3 November 2013
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர்
2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர்
குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக
செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம்
அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள்
மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 10% முதல் 12% ஆக உயரக்கூடும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த
அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2014 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய
அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி
Aவிலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு
அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி
உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால்
இந்த அகவிலைப்படி உயர்வு 10%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2014ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி
100% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2013
மாதத்திற்கான (AICPIN) குறியீடு நவம்பர் 29ஆம் தேதி வெளியிடப்படும் என
தகவல்கள் தெரிவிக்கின்றன. A
e pay 9.1
To downlaod click the link below
http://www.weebly.com/uploads/7/7/9/2/7792996/epay_9.1.rar
http://www.weebly.com/uploads/7/7/9/2/7792996/epay_9.1.rar
செப்டம்பர் / அக்டோபர் 2013, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டல் கோரியும், பிளஸ்டூ துணைத்தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் கோரியும் ஆன்லைனில் 04.11.2013 முதல் 08.11.2013 முடிய www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம்
(எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு
செய்துள்ளது. முதல் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி
துவங்கியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில்
உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு
பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன.
இவற்றில், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதித்தவர்கள் என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வøரான இயலாக் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல், கழிப்பறையை எவ்வாறு பயன்படுத்துவது, பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவை சிறப்பாசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 430க்கும் மேற்பட்ட மையங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மேலும், மையங்களுக்கு தினமும் வரமுடியாத இயலாக் குழந்தைகளுக்கு, அவர்களின்
வீடுகளுக்கு சென்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சி மூலம்
முன்னேற்றமடையும் மாணவர்கள், "ரெகுலர்' மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இணையாக படிக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ்
தற்போது அவ்வாறு பயனடைந்த மாணவர்கள் விவரம், அவர்களின் தற்போதைய நிலைமை
குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணப்படம்: இத்திட்ட
செயல்பாடு, பயிற்சி மூலம் மாணவர்கள் பெற்ற வெற்றியின் வெளிப்பாடு, பெற்றோர்
உணர்வுகள், சிறப்பாசிரியர்கள் அனுபவங்கள், மைய காப்பாளர்கள்,
ஒருங்கிணைப்பாளர்கள், கிராம மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணப்படங்கள்
தயாரிக்க இத்திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, முதற்கட்டமாக
மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, இங்குள்ள 15 அரசு பகல்நேர மையங்கள்
மற்றும் 15 ஆதார மையங்களில் தேர்வுசெய்யப்பட்ட மையங்களில் இதற்கான
படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன்
கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து
ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆவணப்படம் தயாரிப்பது மூலம் திட்ட
செயல்பாடுகள், மாணவர்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்தும்
மக்களிடம் சென்றடையும். 30 நிமிடங்கள் வரை ஓடும் வகையில் ஆவணப்படம்
தயாரிக்கப்படுகி றது. மாநிலத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில்
இப்படம் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து
மாவட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆவணப்படங்கள் தயாரிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது, என்றார்.
Subscribe to:
Comments (Atom)














