Tuesday, 12 November 2013

உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு முதலிடம்: 418 பேர் உடல் உறுப்பு தானம்


சென்னை: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. நம் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 533 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் 67, 757 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளில் இறப்போரின் சதவிகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம். அவ்வாறு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டம் 1/5 மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைபவர்களின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டில் மாநில அரசு அறிமுகப்படுத்தியது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்