இயற்கை வைத்தியம் என்று சொன்னால், அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது. அதிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், விரைவில் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதென்ன நிமோனியா என்று கேட்கலாம்.
நிமோனியா என்றால் நுரையீரலில் ஏற்படும் புண்ணாகும். இந்த புண்ணானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த நிமோனியா இருந்தால், கடுமையான காய்ச்சலுடன், தலை வலி, நெஞ்சு வலி, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம், தலை மற்றும் தொண்டை ஜில்லென்று இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்று வலி போன்றவை கூட ஏற்படும். இவற்றை சரியாக குணப்படுத்தாவிட்டால், வாழ்நாள் முழுவதும் இருக்கும். நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டால், நோயில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இப்போது இந்த நிமோனியாவை குணப்படுத்துவதற்கான சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
1.பூண்டு
நிமோனியாவில் இருந்து விடுபட வேண்டுமானால், உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பூண்டில் உள்ள ஆன்டி-பயோடிக், உடலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.
2.மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், விரைவில் நிமோனியாவில் இருந்து குணமாகலாம்.
3.இஞ்சி
பூண்டை போலவே இஞ்சியையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால், சுவாசக்கோளாறுகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஒரு சிறிய துண்டு இஞ்சியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் தொட்டு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், டீ குடிக்கும் போது, அதில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.துளசி
துளசி ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை. இந்த துளசியில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகம் இருப்பதால், துளசி இலையை தினமும் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், விரைவில் நிமோனியா குணமாகும்.
5.வைட்டமின் சி உணவுகள்
நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப் பழம் மற்றும் தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6.கேரட் ஜூஸ்
கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, நுரையீரலுக்கும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தா, அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் ஏ, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நிமோனியாவில் இருந்து விடுவிக்கும்.
7.தேன்
உட்கொள்ளும் உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், கிருமிகளை அழித்து, வலுவிழந்து இருக்கும் உடலை வலுவானதாக மாற்றும்.
8.பீட்ரூட்
நிமோனியா நோயாளிகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய ஆற்றலை அதிகம் கொண்டிருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடி, நிதோனியாவில் இருந்து விடுவிக்கும்.
9.இறைச்சிகளை தவிர்க்கவும்
இறைச்சிகளை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை அசைவ உணவு சாப்பிட விரும்பினால், கடல் உணவுகளான சால்மன், டூனா போன்ற மீன்களை உட்கொள்ளலாம்.
10.சுடுநீர் ஒத்தடம்
நிமோனியா காய்ச்சலை குறைக்க வேண்டுமானால், சுடுநீரில் துணியை நனைத்து நன்கு பிழிந்து, பின் அதனை நெஞ்சுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நெஞ்சில் உள்ள சளி இளகி, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தாது. courtesy tamil.oneindia.in
No comments:
Post a Comment