அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது
Monday, 30 December 2013
அரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’ !!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நலிந்து கிடந்த கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்தி, அந்த நிறுவனத்தை லாபப் பாதையில் பயணிக்க வைத்திருக்கும் சகாயம் ஐஏஎஸ், ‘வேட்டி தினம்’ கொண்டாட இருப்பதாக ஏற்கெனவே ‘தி இந்து’விடம் சொல்லி இருந்தார். அதன்படி, தைப் பொங்கலையொட்டி ஜனவரி 1 முதல் 14-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை அனைத்துப் பள்ளிகளும் 01.01.2014 ( புதன்கிழமை) முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் (www.tndge.in) திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்...!!!
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்
1. தங்கள் பள்ளியின் “Check List” – ல் உங்கள் பள்ளிக்குரிய அனைத்து தேர்வர்களின் பெயர்களும் அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. தேர்வர்களின் பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவ்விவரத்தினை “Check List” - ன் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையினால் தெளிவாக எழுத வேண்டும்.
3. தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி மற்றும் இதர பாடங்களில் தேர்வெழுதவுள்ள மொழி (Medium of Instructions) ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெயரின் உச்சரிப்பு எழுத்துக்கள் (Spelling) சரிபார்க்கப்பட வேண்டும்.
Saturday, 28 December 2013
அரசு மருத்துவமனைகள் இனி 'பளிச்!': தனியார் பராமரிப்பில் மின்னப் போகிறது !!!

அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது.
Thursday, 26 December 2013
BT to PG Promotion Regarding
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது. முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது 47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும், அதை தொடர்ந்து 897 பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது. முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது 47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும், அதை தொடர்ந்து 897 பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Thursday, 19 December 2013
இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே ஐ.நா. நிரந்தர பணிக்கு மாற்றம் !!!
புதுடெல்லி, டிச.18 : அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் தூதர் கைது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது.
அப்போது பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், “அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் சதி உள்ளது. சதி திட்டத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார். துணை தூதரின் கவுரவத்தை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கைதான பெண் துணை தூதர் திரும்ப அழைக்கப்படுவார். அவரை திரும்ப அழைத்து வருவது நமது பொறுப்பு” என்று கூறினார்.
இந்நிலையில், அவரை நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவர் முழு ராஜதந்திர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், “நமது தகவல் சத்தமாகவும், தெளிவாகவும் அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல புரிந்துணர்வு கொண்ட இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சம்பவங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துமென்றும், இச்சம்பவத்தில் தொடர்புடைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது” என்றார்.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது !!!
தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.
புதிய பென்சன் திட்டம் (CPS) ஆபத்தனாது’ நெ.இல.சீதரன் பேச்சு
புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின் எதிர்காலம் எவ்வித உத்தரவாதமுமில்லாத ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்றார் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்.
"ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு !!!
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்கம், தமிழ்நாடுபிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் சாரண - சாரணியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் மற்றும் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வுநடந்தது.
பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி வெளியிட்ட முடிவுகளின் படி 21 மாணவிகள், 89 மாணவர்கள் உட்பட 110 பேர் தேர்வு பெற்றனர்.பரமக்குடி அரசு பெண்கள் பள்ளியில் 4 பேர், ஆயிர வைசிய 10, கீழ முஸ்லிம் 7, சவுராஷ்ட்ர 8, அலங்கார மாதா 11, லயன்ஸ் மெட்ரிக் 13,டான்பாஸ்கோ, நீராவி தேவாங்கர், திரு இருதய பள்ளி, கமுதி கே.என். ஆண்கள்,பெண்கள் பள்ளியில் தலா 5 பேர், பரமக்குடி வ.உ.சி., 2, ஏ.வி., மெட்ரிக்1, முதுகுளத்தூர் பள்ளி வாசல் 2, பிடாரிசேரி அரசு பள்ளி 9, பெருமாள்கோவில் அரசு பள்ளி 4, பார்த்திபனூர் கிரசண்ட் 7, தூய மரியன்னை பள்ளியில் 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் !!!
பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாள் December 23 தான்.
எனவே பள்ளியின் கடைசி வேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே..? என்ன செய்வது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது....
மார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்!!!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.
எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு !!!
”இது புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி,
இங்கு புகை பிடித்தல் தண்டணைக்குரிய குற்றம்”
என்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி சார்ந்த
இடங்களில் ”அறிவிப்பு பலகையில்” எழுதி வைக்க தொடக்கக்கல்வி
இயக்குனர் உத்தரவு
குறைந்த நில அளவு நிர்ணயம் மெட்ரிக், நர்சரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தப்புமா !!!
குறைந்த நில அளவு நிர்ணயம் செய்ய தமிழக அரசு ஓர் வல்லுனர் குழுவை நியமித்து பல்வேறு நகரங்களில் சென்று கருத்து கேட்பு நடத்தி தன்னுடைய பணியை இறுதி செய்யும் தருவாயில்உள்ளது.
பேராசிரியர் சிட்டிபாபு தலைமையிலான குழு மாநகராட்சிக்கு – 6 கிரவுண்டு, நகராட்சிக்கு – 10 கிரவுண்டு, மாவட்ட தலைநகரங்களில் – 8 கிரவுண்டு, பஞ்சாயித்து யூனியன் – 1 ஏக்கர், மற்றும் கிராமம் – 3 ஏக்கர் என நிர்ணயம் செய்தது
நாட்டின் அணு ஆராய்ச்சித் தந்தை: ஹோமி பாபா !!!
ஹோமிஜிஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில் 30.10.1909 இல் பிறந்தார்.
இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன் உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெüதிகத் துறையை நோக்கிச் சென்றது. படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும் பெற்றார். இவர் ஒரு பிரம்மசாரி. “”நான் முற்போக்கு ஆராய்ச்சியையே மணந்துள்ளேன்” என அடிக்கடி நகைச்சுவையுடன் கூறுவார்.
உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்கள் !!!
லைப்ரரி ஆப் காங்கிரஸ்
வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது
PG TRB - Tamil மேலும் ஒரு வழக்கு தாக்கல் !!!
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.
பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
Tuesday, 17 December 2013
லோக்பால் மசோதாவின் பயன்கள் !!!
லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா சட்டமானால் என்ன நன்மைகள்...
*ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் ஊழல் செய்தால், அவர்கள் மீது விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியும் லோக்பால் முடிவு செய்யும்.
*ஊழலை அம்லபடுத்துபவர்களுக்கு போதிய பாதிகாப்பு வழங்கவும் லோக்பால் மசோதா வழி செய்கிறது.
*ஒருவர் ஊழல் செய்ததன் மூலம் அரசுக்கு ஏதும் இழப்பு ஏற்பட்டால், அவருக்கு தண்டனை விதிக்கும் போது அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்டவரிடமிருந்தே வசூல் செய்ய லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் இருக்கும்.
*அரசு பணி தொடர்பாக மக்களின் கோரிக்கை குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்கப்படாவிட்டால், அதற்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் லோக்பாலில் இடமுண்டு.
*அனைத்து மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும் விசாரிக்க, நடவடிக்கை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் !!!
உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது: R&D முதலீட்டைப் பொறுத்தவரை, சீனா 385 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 228 நிறுவனங்களும், அமெரிக்காவின் விரிகுடா பகுதியில் 220 நிறுவனங்களும் உள்ளன.
R&D துறையில் அதிக நிதி ஆதாரத்தை வைத்துள்ள நிறுவனங்கள், இந்தியாவை அத்துறைக்கான முதலீட்டிற்கு சிறந்த இடமாக கருதுகின்றன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில், R&D துறையில் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய R&D துறை செலவினத்தில், 40% அளவிற்கு, வடஅமெரிக்காவில் தமது தலைமையகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 34% அளவிற்கு ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும், 18% ஜப்பானில் இயங்கும் நிறுவனங்களையும், 7% ஆசிய-பசிபிக் நாடுகளை தலைமையிடமாக கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு!!!
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Friday, 13 December 2013
PG TRB - Tamil Case - Full Detail !!!
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது.
2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார்.
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.!!!
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்
அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம்
“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.
கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.
தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம் !!!
நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை ) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ PDF கோப்பு வடிவில்....!
"குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு ஆர்வத்தில் பொழுதுபோக்காக பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து எளிதாக படிக்க தனித்தனி தலைப்புகளாக, நேர்த்தியாக வடிவமைத்து அளித்தேன். பல நண்பர்கள் வி.எ.ஓ தேர்வுக்கும் அதே போல் அளிக்கும்படி தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். நீங்கள் கோரியபடி பாடத்திட்டம் இத்துடன் இணைப்பில் காண்க."
"பொது அறிவு, மனத்திறன் சோதனை, கிராம நிர்வாகம் மற்றும் புதியவர்களுக்கு தேர்வு முறை குறித்த விவரங்களையும் அளித்துள்ளேன். படித்து பயன்பெறுக."
குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும் !!!
குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு.
குழந்தை வளர்ப்பில் தெளிவான சிந்தனையற்ற பெற்றோர்களால், பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பல பெற்றோர்களும் திணறுகிறார்கள்.
எனவே, குழந்தை வளர்ப்பு பற்றிய சில சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் பதில்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன
வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.!!!
1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.
2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள்.!!!
Monday, 9 December 2013
MPhil Course of Vinayaga Mission university Approved by UGC !!!
நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம்
விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க
ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது.
அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு
பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய
காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி இல்லை என்பதாகும். ஏனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL
நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 2005 முதல் 2012 வரை பெறப்பட்ட
பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும்
தெரிவித்துக்கொள்கிறேன். இதனை இணையதளத்தில் வெளியிடுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
- திரு. மனோகர், திருவண்ணாமலை.
"வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிட வேண்டாம்" !!!
"பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் வேடிக்கை பார்த்து கவனத்தை சிதற விடுவதால் அது, நேரத்தை மட்டுமல்ல; மதிப்பெண்ணையும் இழக்கச் செய்யும்" என, கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்தார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி., அரங்கில் நேற்று நடந்த, "தினமலர்" நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் போது எல்லாருக்கும் ஒரு நடுக்கம் இருப்பது வழக்கம் தான். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்தை எப்படி சுலபமாக கையாள்வது என தெரிந்து கொண்டால், எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு வழி ஏற்படுத்தி தருவது தான், இந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி.
பொதுவாக தேர்வு எழுதும் மாணவர்கள், முந்தைய ஐந்து ஆண்டுகளின் கேள்வித் தாள்களை வைத்து, முக்கிய வினாக்களை தேர்வு செய்வர். இதில் தவறு இல்லை. ஆனால், அந்த கேள்வித் தாள்களை மட்டுமே அடிப்படையாக வைத்து சில கேள்விகள் தேர்வுக்கு வராது என்று முடிவு செய்யக் கூடாது. எல்லா
கேள்விகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வில் எப்போதும், 10 நிமிடம் கூடுதலாக தேவைப்படும். இதற்கு, மெதுவாக எழுதும் பழக்கம் ஒரு காரணம். இதை பயிற்சியின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
ஆனால், மாணவர்கள் வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிடுவதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் வேடிக்கை பார்த்து கவனத்தை சிதறவிடுவதால், வீணாவது நேரம் மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான 10 மதிப்பெண்களும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், குறுக்கு வழியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வரக்கூடாது.
அதேபோல, தேர்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், மாணவர்களுக்கு வேண்டும். தேர்வு முடிவு வெளிவரும் போது பெற்றோர், குழந்தைகளை பக்குவமாக கையாள வேண்டும்." இவ்வாறு, அவர் பேசினார்.
வெள்ளி பதக்கம்
கடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு "தினமலர்" நிறுவனர் உருவம் பதித்த வெள்ளி பதக்கம் மற்றும் அப்துல் கலாம் எழுதிய "திருப்பு முனை" என்ற புத்தகத்தை வழங்கினார்.
பேருந்து பற்றாக்குறை: படிக்கட்டில் தொங்கிய மாணவர் பலி !!!
போக்குவரத்து பற்றாக்குறையால் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவர் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ணூர் அடுத்த சோகன்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் அரவிந்த், 15. இவர் சுங்குவார்சத்திரம் - மப்பேடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளி செல்ல சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் செல்லும் தடம் டி84ஏ என்ற அரசு பேருந்தில் சோகன்டி பேருந்து நிறுத்தத்தில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தின் முன்புற படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. !!!
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு. !!!
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விவரங்களை, தேர்வுத் துறை, ஏற்கனவே வழங்கிய படிவத்தின் மூலம், தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். இந்த விவரங்களை பெறும் பணியை, 10ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அந்த விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். ஒரே நேரத்தில், அனைத்து மாவட்ட விவரங்களும், அப்லோட் செய்ய முடியாது என்பதால், ஒரு வாரத்திற்கு, எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த விவரங்கள் மட்டும் பதிய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தேதியில், இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஜன., 10ம் தேதிக்குள், இந்த பணி முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., இறுதியில், செய்முறை தேர்வு எழுதும் மாணவ,மாணவியருக்கு, பதிவு எண்கள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி, முதல் வாரத்திலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில் இருந்தும், செய்முறை தேர்வு நடக்கிறது.
Saturday, 7 December 2013
பொதுத்தேர்வு மையங்களுக்கு வாடகை ஜெனரேட்டர் வசதி !!!
பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் இப்போதே மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது; சென்னையிலும் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதேபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால், பொதுத் தேர்வின் போது மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டு, ஜெனரேட்டர் வசதி இல்லாத தேர்வு மையங்களில், வாடகை ஜெனரேட்டர்களை பயன்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, ஜெனரேட்டர் தேவைப்படும் தேர்வு மையங் களின் விவரங்களை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. தற்போது, இந்த விவரங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். கடந்த பொதுத் தேர்வில் பயன்படுத்தப்பட்ட வாடகை ஜெனரேட்டர்களுக்கான கட்டணத்தையே, பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்காததால், வரும் ஆண்டில், ஜெனரேட்டர் கிடைக்குமா என்ற நிலை உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில்," ஏராளமான பள்ளிகளுக்கு, ஜெனரேட்டர் கட்டணம் கிடைக்கவில்லை. பழைய கட்டணத்தை, முதலில் கொடுக்க வேண்டும். அப்போது தான், வரும் பொதுத்தேர்வுக்கு, வாடகை ஜெனரேட்டருக்கு ஏற்பாடு செய்ய முடியும்" என்றார்.
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், "எந்தெந்த தேர்வு மையங்களுக்கு, கட்டண நிலுவை உள்ளதோ, அந்த தொகையை, உடனடியாக வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளோம். வரும் பொதுத்தேர்வில், வாடகை ஜெனரேட்டர்களுக்கான கட்டணத்தை அளிப்பதில், தாமதம் ஏற்படாது. தேர்வு முடிந்ததும், தேர்வு மையங்களிடம் இருந்து, பில்களை பெற்று, உடனடியாக வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
வாடகை ஜெனரேட்டர் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஆண்டு போல, இவ்வாண்டும், வாடகைக் கட்டணம் கிடைக்காமல் ஏமாற மாட்டோம்; கடந்த ஆண்டை விட, டீசல் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது; அதனால், உத்தேச வாடகைத் தொகையை, முன்கூட்டியே கொடுத்தால் தான், ஜெனரேட்டர்களை அனுப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சென்னை பள்ளி வகுப்பறைகளில் சுவர் வரைபடங்கள் - ஜனவரியில் வழங்க ஏற்பாடு !!!
வரலாறு, புவியியல் பாடங்களை பள்ளிக் குழந்தைகள் எளிதாக படிக்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவர் வரைபடங்கள் (வால் மேப்) ஒட்டப்பட உள்ளன. இதற்காக 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஜனவரியில் சுவர் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கிய குற்றவாளி கைது !!!

தும்கூர்: பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய்யை தாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். பெங்களூர் ஏ.டி.எம்.-ல் பெண் அதிகாரியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையன் ஒருவன் பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.
ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம் !!!

கலியுகவரதனான ஐயன் ஐயப்பனை வழிபடும் மண்டல காலத்தில் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் "ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல அபூர்வமான தகவல்களையும், புராணக்கதைகளையும், அற்புதமான திருக்கோவில்களின் வரலாற்றையும் அந்தந்த இடங்களுக்கே அழைத்துச் சென்று சாஸ்தாவின் மஹிமைகளை அழகாக எடுத்துரைகிறார்,
சாஸ்தா அரவிந்த் என்றே அழைக்கப்படும் கோவை ஸ்ரீ அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள். ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம் இதுவரை கண்டிராத பல திருக்கோவில்களையும், கேட்டிராத பல அபூர்வமான தகவல்களையும் உள்ளடக்கிய ஆன்மீக நிகழ்ச்சியாக ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" . இந்நிகழ்ச்சி தினமும் காலை 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
ஏற்காடு இடைத்தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை!!!

சேலம்: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சரோஜா, தி.மு.க.வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.
உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT) !!!
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.email : athirugnanasambandam@gmail.com
நன்றி : திரு.தேவராஜன், தஞ்சாவூர்
நன்றி : திரு.தேவராஜன், தஞ்சாவூர்
9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான் !!!

செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
சிறார்களிடையே அதிகரிக்கும் குற்ற செயல்கள் - ஆய்வில் தகவல் !!!
சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின் உபயோகத்தால், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடும் சிறார்கள், அதிகளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் கூர்நோக்கு இல்ல சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறிவரும் கலாசாரத்தின் விளைவாக, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்திலும் அதிவேக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை உள்வாங்கிக் கொள்ளும் சிறார்கள், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதுடன், குற்றச் சம்பவங்களில் அதிகளவு ஈடுபடுகின்றனர். இதற்கு, நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் முறை தவறிய நடத்தை, பொழுதுபோக்கு சாதனங்களின் அபரிமித ஈடுபாடு போன்றவை காரணமாக இருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
விடைத்தாள், காணாமல் போவது பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும் - தேர்வுத்துறை இயக்குனர் !!!
வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்கள், கூடுதல் விடைத்தாள்களை பெற்று, கடைசியில், அதை நூலால் கட்டுவதில் தடுமாறுகின்றனர்; பல மாணவர், சரியாக கட்டுவதில்லை. இல்லையெனில், பக்கங்களை மாற்றி மாற்றி கட்டிவிடுவர். சரியாக கட்டப்படாத விடைத்தாளில் இருந்து, சில பக்கங்கள், தேர்வு மையத்திலேயே, கழன்று விழுந்து, 'மிஸ்' ஆவதற்கு, வாய்ப்பு உள்ளது
இந்திய அளவில் சிறப்பான பள்ளிக் கல்வி - லட்சத்தீவுகள் முதலிடம் !!!
இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது.
பல்வேறு அம்சங்களைக் கொண்ட கல்வி மேம்பாட்டு குறியீடு 2012-13ன் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அணுகுதல், ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் பயன்விளைவு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனியாக ரேங்க் வழங்கப்பட்டது.
Thursday, 5 December 2013
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள் !!!
* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது.
EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .
* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.
* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
நன்றி : தேவராஜன், தஞ்சாவூர்
EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .
* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.
* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
நன்றி : தேவராஜன், தஞ்சாவூர்
10ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை !!!
10ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை பொது தேர்வு கால அட்டவணை
12ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 3: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்;
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்:
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்:
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங். புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்,
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்,
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்,
2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள்,
ஏப்.4ம் தேதி: கணிதம்,
ஏப்.7ம் தேதி: அறிவியல்,
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.
12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்!!!
தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.
கடந்த காலங்களில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடப்பிரிவுகளுக்கு மட்டும் டம்மி எண் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.எனினும், தேர்வுகளில் பல இடங்களில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்கள் காணாமல்போவது, சேசிங் முறையில் திருத்தும் முகாமைக் கண்டறிந்து மதிப்பெண்கள் பெறுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வந்தன.
Wednesday, 4 December 2013
CASUAL LEAVE RULES
தற்செயல் விடுப்பு விதிகள்
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93) 3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. மத விடுப்புடன் சேர்த்து தற்செயல்விடுப்பு எடுக்கலாம்.
5. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
6. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
7. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)
8. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
9. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83
நன்றி-(TESTF பெருந்துறை)
வயது சான்று காண்பித்தால் மட்டுமே திருமண பத்திரிகை அச்சடித்து தரவேண்டும் !!!
"குழந்தை திருமணத்தை தடுக்க, பத்திரிகை அச்சடிக்கும் பிரஸ்களில், வயது சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே அச்சடித்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.' என மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் எஸ்.பி., அவர்கள் தெரிவித்தார்.
TNPSC Group II Tentative Answer Keys | தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான விடை குறிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது.
Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
(Date of Examination:01.12.2013 FN)
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
| |
1
| |
| 2 | GENERAL ENGLISH |
| 3 | GENERAL STUDIES |
| |
எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும் !!!
பேச்சுத்திறன் இருக்கும் ஒருவர் எந்தளவு புகழ் பெறுவாரோ, அதேயளவு, எழுத்துத்திறன் வாய்க்கப் பெற்றவரும் புகழ் பெறுவார். எனவே, சிறப்பாக எழுதப் பழகுங்கள்.
உங்களின் எழுதும் முயற்சி ஆரம்பத்தில் சிறியதாகவே தொடங்கினாலும் பரவாயில்லை. முதலில், செய்தித்தாளுக்கு எழுதலாம். "ஆசிரியருக்கு கடிதம்" மற்றும் "வாசகர் கடிதம்" உள்ளிட்ட பகுதிகளில் எழுதிப் பழகலாம். அதை அனுப்பும் முன்பாக, ஓரளவு நன்றாக எழுதத் தெரிந்த யாரிடமாவது காண்பித்து சரிபார்த்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சில தோல்விகள் வந்தாலும், ஒருநாள் உங்களின் பெயருடன், நீங்கள் எழுதிய விஷயம் செய்தித்தாளில் வெளிவரும். அப்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சி பெரியது.
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு !!!
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறியதாவது:
கல்வி உரிமை சட்டத்தின் பரிந்துரைப்படி, ஒரு பள்ளி, ஒரு வாரத்திற்கு 45 மணி நேரங்கள் செயல்பட வேண்டும். இதன்படி, வாரத்திற்கு 6 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 6 மணிநேரம் 10 நிமிடங்கள் செயல்பட வேண்டியுள்ளது. பள்ளி வேலைநேரம் முடிந்த பிறகும், ஒரு ஆசிரியரை கூடுதலாக 1.20 மணிநேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் திட்டமிடுதல், தயாராதல், சரிபார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். அதேசமயம், ஒரு ஆண்டிற்கு 1200 மணிநேரங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேவையான கூடுதல் ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு 6 நாட்கள் பணி என்ற இந்த திட்டத்தில், சாதக மற்றும் பாதக அம்சங்கள் கலந்தே உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால், 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. !!!
அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கான 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு உள்ளது. மாணவர்களுக்கு இட நெருக்கடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஒரு மையத்தில் 400 மாணவர்கள் வரை மட்டுமே தேர்வு எழுத வேண்டும். 20 பேர் (20க்கு20 அளவு) எழுதும் அளவில் தேர்வறையை பிரிக்க வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 10 முதல் 20 மையங்கள் வரை அதிகரித்திருப்பது குறித்தும், அதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது பற்றி இணை இயக்குனர்கள் விவாதித்தனர். இதன்படி, மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tuesday, 3 December 2013
காரைக்காலில் இயங்கி வரும் பிரெஞ்சு தொடக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தியெரி மரியானி கூறினார்.!!!
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தியெரி மரியானி காரைக்காலுக்கு வருகை தந்தார். காரைக்காலில் உள்ள பிரெஞ்சு தொடக்கப்பள்ளியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் கணினி மைய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்த 8 பேரை சென்னை மாநகராட்சி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் பல இடைநிலை ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்ததாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி விழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
டிசம்பர் 29,ல் நெட் தேர்வு 8 மையங்களில் நடக்கிறது !!!
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC NET) தேர்வு வரும் டிசம்பர் 29,ல் 8 மையங்களில் நடக்கிறது ....

சென்னையில் டிசம்பர் 5ம் தேதி கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் !!!
சென்னையில் வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் பட்டியல்களுடன் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
60% குறைவான தேர்ச்சி: அரசு பள்ளிகளுக்கு கெடு !!!
"கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.
ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : பள்ளிகளில் அறிமுகம்
மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
கர்நாடகாவில் தமிழ் பயிலும் மாணவர்கள் எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறி !!!
ஈரோடு மாவட்டம், பர்கூர் அடுத்த, வேலம்பட்டி அருகே பள்ளி இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், கர்நாடக மாநிலம் நெல்லூரில் தமிழ் பயின்று வருகின்றனர்.
Sunday, 1 December 2013
செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான்... அடுத்த வருடம் செவ்வாயை சென்றடையும்!!!

44 கோடி கிலோமீட்டர் பயணம் :
கிட்டத்தட்ட 44 கோடி கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது மங்கள்யான்.

300 நாட்களுக்கு இந்தப் பயணம் நீடிக்கும். அதன் பின்னர் அடுத்த வருடம் செப்டம்பர் 24ம் தேதி அது செவ்வாயை சென்றடையும்.பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில்
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மங்கள்யானின் செலவானது மிகவும் குறைவாகும். ரூ. 450 கோடி செலவில் இதை உருவாக்கி செவ்வாய்க்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியா.
440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கம்
மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கான பாதையில் செலுத்துவதற்காக அதன் 440 நியூட்டன் திரவ என்ஜினை நேற்று விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினர். கிட்டத்தட்ட 22 நி்மிடங்களுக்கு திரவ எரிபொருள் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் விநாடிக்கு 648 மீட்டர் என்ற வேகத்தில் மங்கள்யானின் வேகம் அதிகரித்தது.
புவி வட்டப் பாதையிலிருந்து விடுபட்டது
இதையடுத்து புவி வட்டப் பாதையிலிருந்து மங்கள்யான் விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கான பாதைக்குள் நுழைந்தது.
எல்லாமே சூப்பர்
இந்த நொடி வரை மங்கள்யான் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கிறது. அதன் பாதை உள்பட அனைத்துமே சிறப்பாக உள்ளன. விண்கலமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில்
தற்போது மங்கள்யான் விண்கலம் மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
Saturday, 30 November 2013
திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,!!!
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
அரசு பள்ளி என்ற தாழ்வான எண்ணம் வேண்டாம் !!!
தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,'' என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது !!!
சிவில் சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும், மே மாதம் நடந்தது. இதை, ஒன்பது லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து, மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை தொடர்ந்து நடக்கிறது. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தாள்களை எழுதுவர். நாடு முழுவதும், 16 ஆயிரம் பேர், மெயின் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 2,000 பேர் எழுதுகின்றனர்.
சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி - தி தமிழ் ஹிந்து கட்டுரை !!!
அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!!!
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
BSNL Bill Discount 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி !!!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி
குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.
குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Thursday, 28 November 2013
மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!!!

சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி !!!
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் தேர்வு ஹால்டிக்கெட், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த தேர்வு முடிவு நகல், பணிநியமன ஆணையை காண்பித்து சான்றை பெற்று செல்கின்றனர்.வரும் 30ம் தேதி வரை ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்
பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களது விடைத்தாள் நகல்கள் examsonline.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் அக்டோபர் 2013 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் உள்ள டிஎம்ஆர் கோட் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கோரிய தேர்வர்கள் மட்டும், அதை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில் நவம்பர் 28 முதல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் டிசம்பர் 2, 3 தேதிகளில் மட்டும் நேரில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்து
Wednesday, 27 November 2013
SSA சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.
இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்
பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி !!!
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
மாணவர்கள் சாதனைகள் புரிவதற்கு தடைகளாக உள்ள மன அழுத்தம், பய உணர்ச்சி, முடிவு எடுத்தலில் தடுமாற்றம், நேர்மறை எண்ணங்களை உயர்த்துவது, தன்னைத்தானே உயர்ந்து கொள்ளுதல், ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிதல், மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஆளுமை திறன் ஆகிய திறன்களை வளர்ப்பதற்காக பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கல்வி அமலில் உள்ளது.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவிகளுக்கு வாழ்வியல் திறன்கள் குறித்த பயிற்சி நடந்து வருகிறது.
இது தான் கலிகாலம் போல இருக்கு பாஸ்! மாணவர்களின் வன்முறைகளை தடுக்க ஆசிர்யர்களுக்கு பயிற்சி.- நாளிதழ் செய்தி
தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க அரசு அனுமதி
"சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது" என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: "கணினி மேம்பாட்டுக்காக தொழில்நுட்ப பூங்காக்களும், செயல் உருவாக்க மையங்களையும், மத்திய அரசு துவங்கியுள்ளது. இவை பெரும்பாலும் தனியாகவோ, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலோ அமைக்கப்பட்டுள்ளன. கணினி மேம்பாட்டு ஆய்வுகளை இப்பகுதிகளுக்கு சென்று செய்து வருகின்றனர். இது போன்ற மையங்கள் தமிழகத்தில் சென்னை தரமணி, சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம், திருப்பெருந்துறை கொங்கு பொறியில் கல்லூரி ஆகியவற்றில் உள்ளன.
Tuesday, 26 November 2013
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள் !!!
தனித்தேர்வர்கள் , இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29 - ந்
தேதி கடைசிநாள் * 
278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு: குரூப் - 4 நிலையில், இன்னும், 222 பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதை நிரப்ப, ஐந்தாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் விவரம், http://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் கல்வியாண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை தமிழ்நாடுஅரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும்: ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
அண்ணாமலைப் பலகலைக்கழக சட்டம் 2013 Act-ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தமிழ்நாடு அட்மிஷன் இன் புரபஷனல் எஜூகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் (Tamil Nadu Admission in Professional Institutions Acy-2006) படி தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும். மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
Sunday, 24 November 2013
National Means Cum Merit scholarship Examination (NMMS) Dec - 2012 Result
National Means Cum Merit scholarship Examination (NMMS) Dec - 2012 Result
Click
Here... NMMS Examination result
NMMS Examination selected Students List Click Here
Here... NMMS Examination result
NMMS Examination selected Students List Click Here
EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?
EMIS - Offline Photo Resize Tutorial
உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: முதல்வர் ஜெயலலிதா உறுதி...!!!
மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34-வது வருட பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் அறிவுசார் தலைநகராக தமிழகம் உருமாறி வருகிறது என்றும், இதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்ற அவர், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34-வது வருட பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் அறிவுசார் தலைநகராக தமிழகம் உருமாறி வருகிறது என்றும், இதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்ற அவர், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல், மன அழுத்தம், தேர்வு பயம், மாணவர், ஆசிரியர் உறவில் விரிசல் உட்பட பல்வேறு பிரச்னைகளை தடுக்க நடமாடும் கவுன்சிலிங் குழுவை அரசு ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் மனநல நிபுணர் தலைமையில் மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது
Saturday, 23 November 2013
24.11.2013 அன்று தமிழ் நாடு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல்
Thursday, 21 November 2013
EMIS - Photos Ready within One Second.
EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட, ஒரே நொடியில் தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - என்றும் அன்புடன் பாடசாலைclick here to down load
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்
குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
Subscribe to:
Comments (Atom)












