Tuesday, 17 December 2013

லோக்பால் மசோதாவின் பயன்கள் !!!


                                             லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா சட்டமானால் என்ன நன்மைகள்... 

                            *ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் ஊழல் செய்தால், அவர்கள் மீது விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியும் லோக்பால் முடிவு செய்யும். 

                            *ஊழலை அம்லபடுத்துபவர்களுக்கு போதிய பாதிகாப்பு வழங்கவும் லோக்பால் மசோதா வழி செய்கிறது. 

                             *ஒருவர் ஊழல் செய்ததன் மூலம் அரசுக்கு ஏதும் இழப்பு ஏற்பட்டால், அவருக்கு தண்டனை விதிக்கும் போது அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்டவரிடமிருந்தே வசூல் செய்ய லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் இருக்கும். 

                              *அரசு பணி தொடர்பாக மக்களின் கோரிக்கை குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்கப்படாவிட்டால், அதற்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் லோக்பாலில் இடமுண்டு. 

                              *அனைத்து மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும் விசாரிக்க, நடவடிக்கை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்