Tuesday, 3 December 2013

காரைக்காலில் இயங்கி வரும் பிரெஞ்சு தொடக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தியெரி மரியானி கூறினார்.!!!


                                      பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தியெரி மரியானி காரைக்காலுக்கு வருகை தந்தார். காரைக்காலில் உள்ள பிரெஞ்சு தொடக்கப்பள்ளியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் கணினி மைய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். 


                                        பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

                                                                                                    காரைக்காலில் அமைந்துள்ள இந்த பிரெஞ்சு தொடக்கப்பள்ளியின் வளர்ச்சியில் பிரெஞ்சு அரசு தனிக்கவனம் கொண்டு, இப்பள்ளிக்கு தேவையான நூலகம் மற்றும் கணினி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், காரைக்காலில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற குடும்பங்களின் குழந்தைகள் 6-ம் வகுப்பிற்கு மேல் பயில புதுச்சேரிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே காரைக்காலில் உள்ள இந்த பிரெஞ்சு தொடக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்