Sunday, 1 December 2013

செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான்... அடுத்த வருடம் செவ்வாயை சென்றடையும்!!!


 
பெங்களூர் :    மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தனது செவ்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது மங்கள்யான். அடுத்த வருடம் செப்டம்பரம் மாதம் 24ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை சென்றடையும். நேற்று நள்ளிரவு சரியாக 12.49 மணிக்கு செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான் செலுத்தப்பட்டது.
                                                       
44 கோடி கிலோமீட்டர் பயணம் :
கிட்டத்தட்ட 44 கோடி கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது மங்கள்யான்.







300 நாட்களுக்கு இந்தப் பயணம் நீடிக்கும். அதன் பின்னர் அடுத்த வருடம் செப்டம்பர் 24ம் தேதி அது செவ்வாயை சென்றடையும்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில்
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மங்கள்யானின் செலவானது மிகவும் குறைவாகும். ரூ. 450 கோடி செலவில் இதை உருவாக்கி செவ்வாய்க்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியா.














440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கம்
           மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கான பாதையில் செலுத்துவதற்காக அதன் 440 நியூட்டன் திரவ என்ஜினை நேற்று விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினர். கிட்டத்தட்ட 22 நி்மிடங்களுக்கு திரவ எரிபொருள் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் விநாடிக்கு 648 மீட்டர் என்ற வேகத்தில் மங்கள்யானின் வேகம் அதிகரித்தது.
புவி வட்டப் பாதையிலிருந்து விடுபட்டது 
              இதையடுத்து புவி வட்டப் பாதையிலிருந்து மங்கள்யான் விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கான பாதைக்குள் நுழைந்தது.
எல்லாமே சூப்பர்
               இந்த நொடி வரை மங்கள்யான் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கிறது. அதன் பாதை உள்பட அனைத்துமே சிறப்பாக உள்ளன. விண்கலமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில்
                 தற்போது மங்கள்யான் விண்கலம் மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்