Wednesday, 24 December 2014

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?


Dial *99*99# from your Mobile handset 

                     சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

                      காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும். ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம்.

 எஸ்.பி.ஐ., மறுப்பு:

                 இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை, வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ் மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்து இருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு, திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.

COURTESY :  www.padasalai.net

Sunday, 7 December 2014

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை !!!


               பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள், வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.


                           பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 5; பத்தாம் வகுப்புக்கு மார்ச் 19ல், பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுகள் வரும் 10ம் தேதி துவங்க உள்ளன.பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில், மாநில அளவில், தரப்பட்டியலில் மாவட்டம் முன்னேறியதுடன், அதிக மாணவர்களும், ரேங்க் பெற்றனர்.முழு பாடத்தையும் மாணவர்கள் எழுதவுள்ளதால், தற்போது அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டு, மாதிரித் தேர்வுகள் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் மீது, ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இத்துடன், காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


HR.SEC.HM. PROMOTION PANEL PREPARATION


    HR SEC HM PROMOTION PANEL PREPARATION   01.01.2015 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள், முதுகலை மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் , அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்வதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விரிவான விவரங்களுடன் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள்..

Monday, 27 October 2014

652 Computer Science Cut Off Seniority !!!


MBC/BC/OC- 22.08.2008
 BCM- 17.8.2009
 SC 24.4.2008.
 SCA - 20.12.2010.
 ST - 3.9.2011.
 PH: 24.06.2014.
 Others: 3.9.2012

 Courtesy : Bed Computer Science Teachers TamilNadu

வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல் !!!


                             சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, 
அக்., 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது.
  
                 இதுகுறித்து மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதில், சர்தார் வல்லபாய் படேல், பிறந்த தினமான அக்., 31ம் தேதியை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

                                    எனவே, பல்கலைகள் தங்கள் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு, இதன் விவரங்களை அறிவுறுத்தி, ஒருமைப்பாட்டிற்கான ஓட்டம் ஒன்றை நடத்தி, மாணவர்களை, ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் ஏற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் !!!


                             இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.


                               ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.

NET Exam


                                    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்” (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்


                    தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். 

                  சந்தீப் சக்சேனா தற்போது தமிழ்நாடு அரசின் வேளாண்துறை செயலாளராக உள்ளார்

Thursday, 18 September 2014

கணித விளையாட்டு!!!


62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452= 11 11 11
55562 - 44452 = 11 11 11 11

 .......and so on

       ======

4 + 9 + 1 +3 = 17
 4913 = 173

      =======

13+ 53 + 33 = 153

===========


 கார்ப்ரேகர் எண் தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு நிலையில் 6174 என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.

 உதாரணம்;

          எடுத்துக் கொண்ட எண்கள்;8,7,9,6
 இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும்
பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும்
பெரிய எண்;8730
சிறிய எண்; 0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின்
பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174

ஒரு சில எண்களுக்கு ஒரே முறையிலும் ,வேறு சில எண்களுக்கு நான்கைந்து தடவைகளுக்குப் பின்னும் இந்த 6174 என்ற எண் வரும் .

Courtesty : Pdasalai.net

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்!!!


                          தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி, டெண்டர் மூலம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலி அட்டை தயாரிக்கப்படுவதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

                              சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.இரண்டு நாட்களில், மேலும், 20 மாவட்டங்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். அடுத்த ஓரிரு நாளில், மீதமுள்ள மாவட்டங்களுக்கு வந்து சேரும்.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, ''வண்ண வாக்காளர் அடையாள அட்டை, இதுவரை வந்தவற்றை அந்தந்த மாவட்டங்களில், உடனடியாக வினியோகம் செய்யும் பணி துவங்கும். ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், அவற்றை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

கட்டணம் வசூல்? 

                        வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அதை தொலைத்தவர்கள், மீண்டும் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, நிறைவு பெற்றதும், அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Epayroll User Manual !!!


அன்பான வாசகர்களே, வணக்கம்!!!
                     
                                 தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும்.

                                 இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே
.
                                இது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த  ePayroll User Manual வழங்கியுள்ளது.

                                      Click here to Download e-payroll user manual

Thursday, 4 September 2014

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல் !!!

Image result for vai ko



மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

                            தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். 

                  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்காமல், தமிழக அரசு ஆணை எண் 71 ன் படி தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை திடீரென்று புகுத்தியுள்ளது. இதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

                   சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் தகுதி, திறமை என்று கூறி 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட மோசடிகளை மீண்டும் செயல்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி !!!




மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள்

                                   மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி : "ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                         "நாட்டின் எதிர்காலம்,பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது" என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல - நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

                       எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது. மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

                       ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற்கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Saturday, 30 August 2014

Upper Primary BRC Training For Maths BTs


                           அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

                           அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

                          பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் உங்களுக்காக !!!


1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search): 
                                        தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது. 

2. கூகுள் திங்க் (Google Think) 
                                        கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர். 

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் !!!


                         புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

                        ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும். தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

பள்ளிகளில் மாணவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது: தமிழக அரசு !!!


                    பள்ளிகளில் மாணவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மாணவ, மாணவிகளை எந்த காரணம் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், பிரம்பு உள்ளிட்ட பொருட்களால் அடிக்கக்கூடாது. அவ்வாறு அடித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, 21 August 2014

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம் !!!



                       பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை எம்.ஜி.யார் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





                  

                    

                                     3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                                      கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு


                             தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன. ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

                             ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, விருது வழங்க உள்ளார். விருதில், ரொக்கம், 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். 

Friday, 15 August 2014

அரசு மேல் நிலைப்பள்ளியில் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் !!!

வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை 
அரசு மேல் நிலைப்பள்ளியில் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் !!!

                      68 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.  பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார்.  முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன்  மற்றும் சின்னாலப்பல்லி  ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் ஆகியோர்கள் முன்னிலையில் தட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவரும. பள்ளியின் கல்விக்குழுத் தலைவருமான திரு. மெய்ஞானம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள். 
    
                     பள்ளியின் உதவித்தலைமை ஆசிாியர் திரு.நந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிாியர் அவர்கள் கௌவரவித்தார்கள்.

                   10ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு  வழக்கம் போல் இந்த ஆண்டும்  ஏாிங்கீழ் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சின்னராஜ்  அவர்கள் தலா ரூ.3000, ரூ2000, மற்றும் ரூ.1000 பாிசு வழங்கினார்கள்.

                     இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின், தலைமை ஆசிாியர், ஆசிாிய ஆசிாியைகளின் சார்பில் பாிசுகள் அளிப்பதென முடிவு செய்து அதன் படி இந்த ஆண்டு, முதல் 3 இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.3000, ரூ2000,  மற்றும் ரூ.1000 பாிசு வழங்கப்பட்டது. 

             இதில் தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்)  கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.




பததாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு.அபிசங்கர்.


பததாம் வகுப்பில் இரண்டாமிடம்  பிடித்த மாணவி செல்வி. ரேகா


பததாம் வகுப்பில் 3ம் இடம்  பிடித்த மாணவி செல்வி.மகாலட்சுமி


12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு. சரத்குமார்


12-ம் வகுப்பில் இரண்டாம் பிடித்த மாணவி. சத்யா





12-ம் வகுப்பில் 3-ம் பிடித்த மாணவன் திரு. எல்.பொன்னுமணி.





 தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்)  கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.






அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !!!

அனைவருக்கும் இனிய 68சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!




Friday, 4 July 2014

PG-TRB இல் இயற்பியல்,பொருளியல்,வணிகவியல் பாடப் பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண் !!!


                             இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற  
PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு 2 மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. 

              அவை எந்தெந்த வினாக்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது. 

 இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள்

.         நேற்று ஏற்கனவே TET சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது. ஆயினும் அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்

தட்டப்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய நுாலகம் !!!

                  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய  நுாலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.N.கருணாநிதி அவர்கள் தலைமையிலும், பள்ளியின் உதவித் தலைமை ஆசிாியர் திரு.T.K..நந்தகுமார் அவா்கள் முன்னிலையிலும் புதிய நுாலக அறை திறக்கப்பட்டது.  பளளியின் ஆசிாியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.  நுாலகம் நல்ல காற்றோட்ட வசதியுடன் படிப்பதற்கு ஏற்ற நிலையில்  உள்ளதாக மாணவ மாணவியர்கள் தொிவித்தனர். 

                  நுாலகத்தில் தினசாி நாளிதழ்கள், (தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திாிக்கைகள்) கதை,கட்டுறை, அகராதி, வேறு பல நாவல்கள்  படிப்பதற்கு வாய்ப்பாக உள்ளதாக மாணவர்கள் தொிவித்தனர். மேலும் இது போன்ற வாய்பை அளித்த கல்வித்துறை அதிகாாிகளுக்கும் தமிழக அரசிற்கும் மாணவர்கள் நனிறி தொிவித்தனர்.







Friday, 20 June 2014

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன? பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர் !!!


                         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு காலை 5 மணிக்கு இனி போன் வரும்!


                   பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்! 

                  கர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது. அதிகாலையில், மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

சறுக்கும் தமிழ்; சரியும் தேர்ச்சி விகிதம்; சிறப்பு கவனம் செலுத்தப்படுமா?


                பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, வரும் கல்வியாண்டிலும் தொடராமல் இருக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 

               கோவை மாவட்டத்தில், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 43 ஆயிரத்து 49 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 41 ஆயிரத்து 154 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். இதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 36 ஆயிரத்து 573 மாணவர்கள் பங்கேற்றதில், 34 ஆயிரத்து 705 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில், தமிழ் பாடத்தில் 1,895 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,868 மாணவர்களும், தோல்வியை தழுவியுள்ளனர். இது, மற்ற பாடங்களில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!!!


                    தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு


                       சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது. தகுதியான தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, 

உடனடி தேர்வு 'ஹால் டிக்கெட் (Hall Ticket for std X ) !!!


                            பத்தாம் வகுப்பு உடனடி தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்,' தேர்வுத் துறை இணையதளத்தில் ெவளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, வரும், 23ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. 
                         

                           இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர்.மாணவர்கள், கடந்த, மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, www.tndge.in என்ற, தேர்வுத்துறை இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, 23 May 2014

3 பேர் 500-க்கு 500 !!!

                  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்
                 
               தமிழ் அல்லாத பிற மொழிப் பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்). பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு) ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

              

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!!!


                      தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

                     இவர்களில், 18 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண். இரண்டாமிடத்தை, 498 மதிப்பெண்களுடன், 125 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள் மற்றும் 24 பேர் ஆண்கள். மேலும், மூன்றாமிடத்தை 497 மதிப்பெண்களுடன் 321 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் 246 பேர் பெண்கள் மற்றும் 75 பேர் ஆண்கள். 

                   அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காத மாணவர்களில், மொத்தம் 3 பேர் 500க்கு 500 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!!!


      இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம். 

மொழிப்பாடம் - 255 பேர் 

ஆங்கிலம் - 677 பேர் 

கணிதம் - 18,682 பேர் 

அறிவியல் - 69,560 பேர் 

சமூக அறிவியல் - 26,554 பேர்.

SSLC : 19பேர் முதலிடத்தை பிடித்தனர்;இரண்டாம் இடம் 125 பேர் ! 321 பேர் மூன்றாம் இடம் !!!


* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

 *125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்

 *321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்

 *முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்

 *முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

 *மாணவர் தேர்ச்சி விகிதம் 90.7சதவீதம்

10th Result : மாவட்ட வாாியாக தேர்ச்சி சதவீதம்


                  10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.

                    இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது
                   .பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

 வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

 மாவட்டம்  /  தேர்ச்சி  விகிதம் (%)   /   பள்ளிகளின் எண்ணிக்கை 

ஈரோடு 97.88   334
கன்னியாகுமரி 97. 78    391
 நாமக்கல் 96. 58    298
 விருதுநகர் 96. 55    325
 கோயம்பத்தூர் 95. 6   502
 கிருஷ்ணகிரி 94.58    356
 திருப்பூர் 94.38   312
 தூத்துக்குடி 94.22   278
 சிவகங்கை 93.44    256
 சென்னை 93.42   589
 மதுரை 93.13   449
 ராமநாதபுரம் 93.11   227
 கரூர் 92.71   180
 ஊட்டி 92.69   177
 தஞ்சாவூர் 92.59   390
 திருச்சி 92.45   396
 பெரம்பலூர் 92.33   124
 திருநெல்வேலி 91.98    448
 சேலம் 91.89   473
 புதுச்சேரி 91.69   279
 தர்மபுரி 91.66   285
 புதுக்கோட்டை 90.48   295
 திண்டுக்கல் 89.84    317
 திருவள்ளூர் 89.19   580
 காஞ்சிபுரம் 89.17   565
 தேனி 87.66   184
 வேலூர் 87.35   566
 அரியலூர் 84.18   149
 திருவாரூர் 84.13   203
 கடலூர் 83.71   385
 விழுப்புரம் 82.66   534
 நாகப்பட்டினம் 82.28   263
 திருவண்ணாமலை 77.84    450

Thursday, 22 May 2014

நாளை எஸ்.எஸ.எல்.சி. தேர்வு முடிவுகள் !!!



சென்னை  
                       தமிழகத்தில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப் படுகிறது. தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதள முகவரி களில் மதிப்பெண் விவரங் களுடன் அறிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

Wednesday, 14 May 2014

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம் !!!



                                    

      SCHOOL FREE BUS PASS DOWNLOADS
S.NOFILE NAMEDOWNLOAD
1Application FormClick Here
2InstructionClick Here
3Soft Copy FormatClick Here
4Delivery ChallanClick Here

கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு !!!


                        நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது. 

                        இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர், பாடப் பிரிவு, நேர்முகத் தேர்வு நாள் ஆகிய விவரங்கள் கேந்திரீய வித்யாலயா இணையதளத்தில் (www.kvsangathan.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம், பயோடேட்டா, உறுதிமொழி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கேந்திரீய வித்யாலயா அமைப்பின் இணை ஆணையர் (நிர்வாகம்) தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு? !!!


                CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். 

                  12ம் வகுப்பு தேர்வை 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்சி தேர்வுகள் முடிந்து, 2 மாதங்கள் அல்லது 45 நாட்களுக்கு பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.ஆனால், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு, விடைத்தாள் திருத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தென் மண்டலத்துக்கான தேர்வு முடிகள் மே 27 மற்றும் 28ம் தேதிகளில் வெளியானது.இந்த ஆண்டும் அது போலவே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

Monday, 12 May 2014

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்!!!


                ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும்,  தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?


                            பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்) 


                           ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறு விண்ணப்பிப்பது? பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ மற்றும்’ ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/ வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும். 

Saturday, 26 April 2014

மே 9-ல் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் வலைத்தள முகவரிகள் !!!


                          மே 9-ம் தேதி வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அன்றைய தினம் அறிந்துகொள்வதற்கான வலைத்தளங்களின் முகவரிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வலைத்தள முகவரிகள்:
www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in

ஸ்மார்ட் போன்களில் முடிவுகளை அறிய

http://www.dge1.tn.nic.in 

என்ற வலைத்தளத்தை நாடலாம்.

                          மே 9-ம் தேதி காலை 10 மணி முதல் 092822 32585 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வு !!!


                          ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

                        தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். 

                      இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். 

                     தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

 இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

 ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை
ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,                                          மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2
ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2
 ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2
ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2
ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

 முதலாமாண்டு தேர்வு அட்டவணை: 

 ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை
 ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1 ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1
ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1
ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1
ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1
ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம் !!!


                          தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

                         முன்னதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த 3 நாள் பயிற்சியில் பங்கேற்ற பல ஆசிரியர்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை. இதுதவிர தேர்தலுக்கு முதல்நாள் இரவுதான் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேர்தல் பணிக்கான இடங்களை கண்டுபிடித்து செல்வதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். கலெக்டர்கள் வழங்கிய உத்தரவில் பல குழப்பங்கள் இருந்ததால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திரும்பினர். மேலும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடவசதியும் செய்யப்படவில்லை. உணவும் பிரச்னைதான். 

                              இதேபோல தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் படிவம் 12பி மற்றும் 12 படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யவில்லை என்ற குறை உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இதுபோல் பாதிக்கப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து பயிற்சிக்கான பணம் வழங்கவும், தபால் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    மேலும் பணி முடித்து ஊர் திரும்பும் போது அரக்கோணத்தைச் சேர்ந்த ஆசிாியை திருமதி.                         என்பவர் இரயில் ஏறும் போது தவறி விழுந்து மரணமடைந்தார். எனவே இது போன்ற பணியின் போது ஆசிாியர்களுக்கு உாிய வசதி செய்து தர வேண்டும் என ஆசிாியப் பெருமக்கள் பொிதும்   எதிர்பார்க்கின்றனர்.


பிளஸ் 2 விடைத்தாள் நகல் !!!








தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும் !!!


                 தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள்எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம்கூறியுள்ளது. 

                        வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது, மேலும் வேட்பாளர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தில்லியிலிருந்து வரும் தேர்தல் பார்வையாளர்களை வேட்பாளர் செலவுக் கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 2,518 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குகளில், மே 16ம் தேதிக்குள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு !!!


                        திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                       தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும்.

Saturday, 29 March 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்


                           பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

                           கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும். தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள் இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும் ஆசிரியரே அதற்கான ‘டம்மி’ எண் போட்டு திருத்த வேண் டிய நிலையில் உள்ளனர்.

                      பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து ‘டம்மி’ எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால் குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் திணறல் காணப்பட்டது. ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.

பள்ளி கல்வி துறை : ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை அறிவிப்பு !!!


                        ஏப்ரல் 23 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிகல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16 : பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவு

ஏப்ரல் 17 : பெரிய வியாழன் விடுமுறை

ஏப்ரல் 18 : புனிதவெள்ளி விடுமுறை

ஏப்ரல் 19 : சனி விடுமுறை

ஏப்ரல் 20 : ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 21 : பள்ளி வேலை நாள்

ஏப்ரல் 22 : பள்ளி வேலைநாள்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10 முதல் 19 வரை நடைபெறவுள்ளது

                          பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. 

                           பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                          இந்த மையங்களை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளிகளின் மூலமாக 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதி வருகின்றனர்.


                           மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பயிற்சி காரணமாக ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் மதிப்பீடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாட விடைத்தாள்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள்: 

                          மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை, ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகின்றன இந்த வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

                            இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு தயாராக உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்தமாக வினாத்தாள்களை எடுத்து வருவதற்குப் பதிலாக ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வினாத்தாள் காப்பு மையங்களிலிருந்து வினாத்தாள்கள் எடுத்துவரப்பட உள்ளன.

Saturday, 15 March 2014

அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்வு துறை: முறைகேடுகளுக்கு இனி வாய்ப்பில்லை!!!


                     பொதுத் தேர்வு திட்டங்களில், முறைகேடுகளுக்கு வழிவிட்ட ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய திட்டங்கள் மூலம், முழுமையாக அடைத்து, தேர்வுத் துறை சாதனை படைத்துள்ளது. துறையின் நடவடிக்கைக்கு, மாணவர் மட்டும் அல்லாமல், ஆசிரியர் அமைப்புகளும், வரவேற்பு தெரிவித்துள்ளன.

                    கடந்த ஆண்டு வரை, தேர்வுத் துறை, கலவர துறையாக இருந்தது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், குழப்பம் இன்றி முடியுமா என்பதில், தேர்வுத் துறைக்கே சந்தேகம் இருந்தது. கேள்வித் தாளில், குளறுபடியான கேள்விகள் கேட்பதில் துவங்கி, விடைத்தாள்களை, பத்திரமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு சேர்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது வரை, ஒரே பதற்றம் தான்! இந்த ஆண்டு, கடந்த, 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வு, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து வருகிறது. ஒவ்வொரு பணியும், திட்டமிட்டபடி சரியாக நடப்பது, தேர்வுத்துறைக்கு, மகிழ்ச்சியை தந்துள்ளது. 

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டறிய.....

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டறிய.....

இங்கே சொடுக்கவும்......

Saturday, 8 March 2014

TNPSC Group IV Mark and Rank


Posts included in GROUP-IV Services, 2013 - 2014
 (Date of Written Examination:25.08.2013) 
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION


50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!


                   மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                     புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும், அதற்கு முன்பு ஒப்புக் கொண்டபடி 10 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் உடனடியாக சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவினர் அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்விற்கான கால அட்டவணை அறிவிப்பு !!!

                   பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

 தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி முடிவடைகிறது.

ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் என  பள்ளி  கல்வித்துறை  அறிவிப்பு .

Standards VI to VIII
Forenoon Session 10 a.m to 12.30 p.m
DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language
8.04.2014
Tuesday
English
10.04.2014
Thursday
Mathematics
11.04.2014
Friday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science


3rd Term Summative AssessmentExamination
Standards IX
Afternoon Session 2.00 p.m to 4.30 p.m
DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language Paper I
8.04.2014
Tuesday
Language Paper II
9.04.2014
Wednesday
English Paper I
10.04.2014
Thursday
English Paper II
11.04.2014
Friday
Mathematics
12.04.2014
Saturday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science

Practical Examination for Standard IX should be conducted before 25 March 2014

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்