வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய நுாலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.N.கருணாநிதி அவர்கள் தலைமையிலும், பள்ளியின் உதவித் தலைமை ஆசிாியர் திரு.T.K..நந்தகுமார் அவா்கள் முன்னிலையிலும் புதிய நுாலக அறை திறக்கப்பட்டது. பளளியின் ஆசிாியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நுாலகம் நல்ல காற்றோட்ட வசதியுடன் படிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதாக மாணவ மாணவியர்கள் தொிவித்தனர்.
நுாலகத்தில் தினசாி நாளிதழ்கள், (தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திாிக்கைகள்) கதை,கட்டுறை, அகராதி, வேறு பல நாவல்கள் படிப்பதற்கு வாய்ப்பாக உள்ளதாக மாணவர்கள் தொிவித்தனர். மேலும் இது போன்ற வாய்பை அளித்த கல்வித்துறை அதிகாாிகளுக்கும் தமிழக அரசிற்கும் மாணவர்கள் நனிறி தொிவித்தனர்.






No comments:
Post a Comment