திருச்சி, பிப்.26&
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்க்ள இன்று வேலை நிறுத்த போரட்டம் செய்தனர். அரசு பள்ளி, நடுநிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் 6வது ஊதியக்குழுவில் அளித்துள்ள போக்குவரத்துப்படி, வீட்டு வாடகைப்படி, கற்பித்தல்படி ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்திவருகிறது. அதன்படி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்திட்டு பணி செய்யவில்லை. அதனை தொடர்ந்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தினர். அதன்படி அனை த்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு வகுப்புகளை புறக்கணித்தனர். இந்த போராட்டத்தில் சுமார் 50ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் 178, நடுநிலைப்பள்ளிகள் 60, அரசு உதவி பெறும் பள்ளிகள் 52 உள்ளது. இதில் சுமார் 1333 ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் 834 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் 632 ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
அரியலூரில் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் 275 பெண்கள் உள்பட 500பேர் பணிக்கு வரவில்லை.
கரூரில் குளித்தலை கோட்டத்தில் 59 பள்ளிகளில் 129 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை,
சிந்தாமணிப்பட்டி, கடவூரில் உள்ள 20 பள்ளிகளில் 60 ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் 118 பள்ளிகளை சேர்ந்த 143 ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
இதேபோல் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 50ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
நன்றி TAMIL NADU TEACHER'S NEWS BLOG
No comments:
Post a Comment