Monday, 3 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை: முதல் அமைச்சர் ஜெயலலிதா !!!



                  டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

                சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும். 

              இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

             இந்த சலுகை, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்