திருச்சி, பிப்.26&
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்க்ள இன்று வேலை நிறுத்த போரட்டம் செய்தனர். அரசு பள்ளி, நடுநிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
Wednesday, 26 February 2014
ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?
2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை
கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.
TRB:TNTET-2013 Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks !!!
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks
Saturday, 22 February 2014
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கேன்வாஸ் ஷு மட்டுமே பயன்படுத்த ஆணை !!!
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக கேன்வாஸ் ஷ¤க்களையே பயன்படுத்த வேண்டுமென சி.பி.எஸ்.இ., அமைப்பு, தனது இணைப்பு பள்ளிகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலத்தின் People for Animals என்ற அமைப்பை சேர்ந்த கவுரி மவுலேக்கி, இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ., தலைவருக்கு எழுதிய கடிதத்தின்படி, சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், லெதர் ஷ¤க்கள் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் கெடுதல் செய்பவையாக உள்ளன. ஏனெனில், லெதர் உற்பத்தி செய்யும்போது பெரிய நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, லெதரையே பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமாக அந்த அபாயத்தை தடுக்க முடியும். சுற்றுச்சூழலையும், விலங்குகளையும் பாதுகாக்க முடியும்.
பள்ளி மாணவர்கள் லெதர் ஷ¤க்கள் அணியும் வழக்கத்தை மாற்றுவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு பெருமளவில் துணைபுரிய முடியும். மேலும், லெதர் ஷ¤வுடன் ஒப்பிடுகையில் கேன்வாஸ் ஷ¤க்கள், மாட்டுவதற்கும், கழற்றுவதற்கும் எளிதானவை மற்றும் சொகுசானவை மட்டுமின்றி, விலையும் குறைவு. மேற்கண்ட பல்வேறு காரணங்களால் இந்தப் புதிய முடிவை சி.பி.எஸ்.இ., எடுத்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நடுநிலைபள்ளிகளில் கணித ஆய்வு கூடம் நிறுவுதல் குறித்து அறிவுரை !!!
2013-2014ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்தவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ \மாணவியர்களுக்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் வீதம் 32 மாவட்டத்திற்கு 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.128.00 இலட்சம் ( 64 x 2) ""நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்துதல்"" திட்டத்தின் மூலம் கணித ஆய்வு கூடங்கள் (Maths Learning in Upper Primary School) நிறுவ நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட திட்டத்தை மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை கீழ்காண் நிபந்தனைகளின்படி தேந்தெடுத்து, உரிய படிவத்தில் அனுப்புமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் குறைந்த பட்சம் 60 மாணவ\மாணவிகள் படிக்கும் பள்ளிகளை தேர்வு செய்யப்படவேண்டும்.
2. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்த கணித ஆய்வுகூடம் இருப்பதற்கு தனியாக கூடுதல் வகுப்பறை இருத்தல் வேண்டும்.
3. கணித ஆய்வுகூடம் தொடர்பாக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை பள்ளிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு தகுந்த இடம் இருத்தல் அவசியம்.
4. ஆர்வமும் திறமையும் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இரண்டினை தேர்ந்தெடுத்து 05.03.2014க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Strike - அன்று அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் செயல்படவேண்டும் என இயக்குனர் உத்தரவு!!!
தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
( 7அம்சக் கோரிக்கை ) நடத்தும் போராட்டத்தால் எந்த பள்ளியும்
மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம்
செயல்படவேண்டும் எனவும் இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 Panel தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு !!!
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது !!!
முதல்வர் அம்மா அவர்களி்ன் பிறந்த நாள் பாிசு !!!
பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராகபதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது.
மேலும், கடந்த ஆண்டு களில்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல்,2:30 மணிக்கு,முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.
அனைவருக்கும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ல் பணியில் சேரும் வகையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Friday, 21 February 2014
SG ASSISTANT TO BT ASSISTANT கலந்தாய்வு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 22.02.2014 அன்று நடைபெறும்!!!
SG ASSISTANT TO BT ASSISTANT PROMOTION COUNSELLING ON 22.02.2014 AT CEO'S OFFICE VELLORE AT 9.00 A.M
Thursday, 20 February 2014
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!!
அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைவாழ் இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஹில் அலவன்ஸ் மற்றும் குளிர்கால அலவன்ஸ் திருத்தி அமைக்கப்பட்ட ஆணை.!!!
மலைவாழ் இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஹில் அலவன்ஸ் மற்றும் குளிர்கால அலவன்ஸ் திருத்தி அமைக்கப்பட்ட ஆணை.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணி :தமிழக முதல்வர் 2 பேருக்கு இன்று (20.02.14)பணி நியமன ஆணை வழங்கினார் !!!
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர்பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
Sunday, 9 February 2014
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி,பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் !!!
இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது !!!
இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
பாரதிதாசன் பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு !!!
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் எம்.எஸ்சி, இயற்பியல், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., பாட்டனி, எம்.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.தேர்வு முடிவுகளை அறிய விரும்பும் மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே !!!
இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மொத்த வருமானம் 550000 என உள்ளீடு செய்து u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 100000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்:
சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-.
ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-
அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து
எனவே NET TAXABLE INCOME 5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது .வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்:
சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-
ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-
அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து. எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது.
u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி சரியான தெளிவுரையாக இதை எடுத்துக்கொள்ளலாம் .
கருவூல அதிகாரிகள் மறுத்தால் 2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே பொறுத்து பின்னர் சம்பள பில் அணுப்பவும்.
அவசரம் வேண்டாம் சரியான தெளிவுரை அவர்களுக்கு புரியும் வரை பொறுப்போம்.
மேலும் விவரங்களுக்கு http://www.incometaxindia.gov.in/home.asp
Monday, 3 February 2014
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை: முதல் அமைச்சர் ஜெயலலிதா !!!
டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
இந்த சலுகை, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆங்கில வழிக் கல்வி ஏன்?- பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் !!!
ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன்.
Subscribe to:
Comments (Atom)


