Thursday, 18 September 2014

கணித விளையாட்டு!!!


62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452= 11 11 11
55562 - 44452 = 11 11 11 11

 .......and so on

       ======

4 + 9 + 1 +3 = 17
 4913 = 173

      =======

13+ 53 + 33 = 153

===========


 கார்ப்ரேகர் எண் தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு நிலையில் 6174 என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.

 உதாரணம்;

          எடுத்துக் கொண்ட எண்கள்;8,7,9,6
 இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும்
பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும்
பெரிய எண்;8730
சிறிய எண்; 0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின்
பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174

ஒரு சில எண்களுக்கு ஒரே முறையிலும் ,வேறு சில எண்களுக்கு நான்கைந்து தடவைகளுக்குப் பின்னும் இந்த 6174 என்ற எண் வரும் .

Courtesty : Pdasalai.net

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்!!!


                          தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி, டெண்டர் மூலம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலி அட்டை தயாரிக்கப்படுவதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

                              சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.இரண்டு நாட்களில், மேலும், 20 மாவட்டங்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். அடுத்த ஓரிரு நாளில், மீதமுள்ள மாவட்டங்களுக்கு வந்து சேரும்.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, ''வண்ண வாக்காளர் அடையாள அட்டை, இதுவரை வந்தவற்றை அந்தந்த மாவட்டங்களில், உடனடியாக வினியோகம் செய்யும் பணி துவங்கும். ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், அவற்றை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

கட்டணம் வசூல்? 

                        வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அதை தொலைத்தவர்கள், மீண்டும் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, நிறைவு பெற்றதும், அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Epayroll User Manual !!!


அன்பான வாசகர்களே, வணக்கம்!!!
                     
                                 தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும்.

                                 இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே
.
                                இது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த  ePayroll User Manual வழங்கியுள்ளது.

                                      Click here to Download e-payroll user manual

Thursday, 4 September 2014

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல் !!!

Image result for vai ko



மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

                            தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். 

                  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்காமல், தமிழக அரசு ஆணை எண் 71 ன் படி தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை திடீரென்று புகுத்தியுள்ளது. இதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

                   சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் தகுதி, திறமை என்று கூறி 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட மோசடிகளை மீண்டும் செயல்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி !!!




மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள்

                                   மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி : "ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                         "நாட்டின் எதிர்காலம்,பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது" என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல - நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

                       எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது. மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

                       ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற்கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்