Saturday, 15 August 2015

HAPPY INDEPENDENCE DAY








'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு!!!


                                            'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

                                           வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி., முகவராக பணிபுரிகிறார். மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது பிரிவினருக்கு, 410; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 146; ஆதி திராவிடர் வகுப்பினருக்கு, 95; பழங்குடியினருக்கு, மூன்று மற்றும் பின்னடைவு காலியிடங்கள் என, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

                                          மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பற்றிய, எந்த குறிப்பும் அதில் இடம் பெறவில்லை. சட்டப்படி, 3 சதவீத பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை ஒதுக்கி, புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மாற்று திறனாளிகளுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய, 3 சதவீத இடங்களை, எல்.ஐ.சி., நிர்வாகம் வழங்க தவறி விட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான, 3 சதவீத இடங்களை நிரப்ப, தனியாக விளம்பரம் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?


                          அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 

                           கடந்த 2012ல் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது.நிதி நெருக்கடியால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட செயல்பாடுகள் குறைந்தன; ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன; இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.இந்நிலையில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி குறைப்பால் இப்பதவி காலியாக உள்ளது. இதற்கான பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை, நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018 வரை இப்பதவியை நீடிக்கலாம், என்றார்.
COURTEST : PADASALAI.NET

TNPSC Department Exam May- 2015 Results published

பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!!!

பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!

                                          பட்டாம்பூச்சிகளின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள நிறங்களைக் கண்டு எப்போதாவது சிலிர்த்துப் போனதுண்டா? சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்த இந்தப் பட்டாம்பூச்சிகள் கடந்த நூற்றாண்டில் மட்டும் அதன் நான்கு இனங்களை முற்றிலுமாகவே இழந்து விட்டன. நம்மால் பேச முடியும், யோசிக்க முடியும் யோசித்தவற்றைச் செய்ய முடியும் என்கிற எண்ணத்தால் மனிதர்களாகிய நாம் பிற உயிரினங்களை துன்புறுத்துவதைப் பற்றியோ, அவற்றை அழிப்பதைப் பற்றியோ உணர்ந்துகொள்ளாமல், கடந்துபோய் விடுகிறோம்.

69 th Independence Day celebrations at GHSS THATTAPPARAI


                        69 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சின்னாலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் அவர்கள் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள்  தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்