Saturday, 15 August 2015
'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு!!!
'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி., முகவராக பணிபுரிகிறார். மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது பிரிவினருக்கு, 410; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 146; ஆதி திராவிடர் வகுப்பினருக்கு, 95; பழங்குடியினருக்கு, மூன்று மற்றும் பின்னடைவு காலியிடங்கள் என, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பற்றிய, எந்த குறிப்பும் அதில் இடம் பெறவில்லை. சட்டப்படி, 3 சதவீத பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை ஒதுக்கி, புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மாற்று திறனாளிகளுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய, 3 சதவீத இடங்களை, எல்.ஐ.சி., நிர்வாகம் வழங்க தவறி விட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான, 3 சதவீத இடங்களை நிரப்ப, தனியாக விளம்பரம் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர
விட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?
அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2012ல் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது.நிதி நெருக்கடியால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட செயல்பாடுகள் குறைந்தன; ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன; இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.இந்நிலையில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி குறைப்பால் இப்பதவி காலியாக உள்ளது. இதற்கான பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை,
நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018 வரை இப்பதவியை நீடிக்கலாம், என்றார்.
COURTEST : PADASALAI.NET
பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!!!

பட்டாம்பூச்சிகளின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள நிறங்களைக் கண்டு எப்போதாவது சிலிர்த்துப் போனதுண்டா? சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்த இந்தப் பட்டாம்பூச்சிகள் கடந்த நூற்றாண்டில் மட்டும் அதன் நான்கு இனங்களை முற்றிலுமாகவே இழந்து விட்டன.
நம்மால் பேச முடியும், யோசிக்க முடியும் யோசித்தவற்றைச் செய்ய முடியும் என்கிற எண்ணத்தால் மனிதர்களாகிய நாம் பிற உயிரினங்களை துன்புறுத்துவதைப் பற்றியோ, அவற்றை அழிப்பதைப் பற்றியோ உணர்ந்துகொள்ளாமல், கடந்துபோய் விடுகிறோம்.
69 th Independence Day celebrations at GHSS THATTAPPARAI
69 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சின்னாலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் அவர்கள் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
Friday, 10 July 2015
7th Pay Commission Pay and Allowances Estimation !!!
Readers must be aware, we estimated 7th Pay Commission pay scale as on 01.01.2016 in the month of April 2014 after constitution of 7th Pay Commission following methods adopted by 6th Pay Commission for revising Central Government Employees Pay and allowances.
7th CPC ESTIMATED PAY CALCULATOR
PG REGULARISATION ORDER
முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்
CLICK HERE TO DOWNLOAD
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | அரசாணை(நிலை) எண்.135, பள்ளிக்கல்வித் (வ.செ.2) துறை, நாள். 03.06.2010-ன்படி நேரடி நியமனம் செய்ய 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இவ்வலுவலக செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நேரடி பணி நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இவ்வாணை வழக்கு நீதிப்பேராணை மனு எண்.13884/2008-ல் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பாணைக்குட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளின் நகல்களை தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைப்பதோடு, அவர்களது பணிப்பதிவேடுகளில் பதிவுகளை செய்ய உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்
Monday, 6 July 2015
பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது
பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன.
பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன.
ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்த வலியுறுத்தல்
ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன், பொதுச் செயலாளர் டி.கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா, துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது. வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி ஜாக்டோ சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஒரு நாள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது. ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும். காலி பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளிப்படையாகத் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Thursday, 23 April 2015
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.!!!
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இன்று வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை,
http://www.dge.tn.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, http://www.dge3.tn.nic.in/
ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
TN GOVT 6% D.A - G.O DOWNLOAD
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2015 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
2. இந்த அகவிலைப்படி உயர்வு
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
3. இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 1222.76/- கோடி ரூபாய் செலவாகும் என அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sunday, 12 April 2015
கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு !!!
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை
போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய் வடைந்துள்ள தாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.
மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்த வசதியை பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை பெறும் இப்பள்ளி,
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை
தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி.
Saturday, 11 April 2015
Friday, 10 April 2015
ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்
ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வீடு வாங்குவோர் இந்த மசோதா தொடர்வாக தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் வருமாறு:
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை
தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.
விண்ணப்பங்களை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டே கால் லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ் தேர்வுகள் வெளியாகும் என்பதால், அதற்கு முன்பே விண்ணப்ப விநியோகத்தைத் துவக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.
1. GO 252/ 05.10.2012 & GO 244/30.11.2013) 60% மதிப்பெண் பெறுபவர்களுக்கு முதன் முதலில் அறிவித்த WTGE(SLAB SYSTEM) முறை.
2. GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வு பற்றி அறிவித்தது.
விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு !!!
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை கூறுகையில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும் ஆகும்.மேலும், நிகழாண்டில் பள்ளி தொடங்கிய உடன் முன் கூட்டியே இலவச பயண அட்டை வழங்கவும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம் அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படஇருக்கிறது
Subscribe to:
Comments (Atom)


