Friday, 10 July 2015

7th Pay Commission Pay and Allowances Estimation !!!


Readers must be aware, we estimated 7th Pay Commission pay scale as on 01.01.2016 in the month of April 2014 after constitution of 7th Pay Commission following methods adopted by 6th Pay Commission for revising Central Government Employees Pay and allowances.

7th CPC ESTIMATED PAY CALCULATOR

PG REGULARISATION ORDER


                        முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

CLICK HERE TO DOWNLOAD

                  தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | அரசாணை(நிலை) எண்.135, பள்ளிக்கல்வித் (வ.செ.2) துறை, நாள். 03.06.2010-ன்படி நேரடி நியமனம் செய்ய 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இவ்வலுவலக செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நேரடி பணி நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இவ்வாணை வழக்கு நீதிப்பேராணை மனு எண்.13884/2008-ல் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பாணைக்குட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளின் நகல்களை தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைப்பதோடு, அவர்களது பணிப்பதிவேடுகளில் பதிவுகளை செய்ய உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்

Monday, 6 July 2015

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது


                     பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன. பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. 

ஆசிரியர் இடமாறுதல் ,பதவி உயர்வு கலந்தாய்வு -விண்ணப்பம அனுப்புவதில் திடீர் மாற்றம் ?கல்வித்துறை புதிய உத்தரவு

ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்த வலியுறுத்தல்


                              ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
                            தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன், பொதுச் செயலாளர் டி.கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா, துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

                          வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது. வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி ஜாக்டோ சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஒரு நாள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது. ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும். காலி பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளிப்படையாகத் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்