இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை கூறுகையில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும் ஆகும்.மேலும், நிகழாண்டில் பள்ளி தொடங்கிய உடன் முன் கூட்டியே இலவச பயண அட்டை வழங்கவும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம் அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படஇருக்கிறது