Friday, 23 May 2014

3 பேர் 500-க்கு 500 !!!

                  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்
                 
               தமிழ் அல்லாத பிற மொழிப் பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்). பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு) ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

              

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!!!


                      தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

                     இவர்களில், 18 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண். இரண்டாமிடத்தை, 498 மதிப்பெண்களுடன், 125 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள் மற்றும் 24 பேர் ஆண்கள். மேலும், மூன்றாமிடத்தை 497 மதிப்பெண்களுடன் 321 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் 246 பேர் பெண்கள் மற்றும் 75 பேர் ஆண்கள். 

                   அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காத மாணவர்களில், மொத்தம் 3 பேர் 500க்கு 500 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!!!


      இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம். 

மொழிப்பாடம் - 255 பேர் 

ஆங்கிலம் - 677 பேர் 

கணிதம் - 18,682 பேர் 

அறிவியல் - 69,560 பேர் 

சமூக அறிவியல் - 26,554 பேர்.

SSLC : 19பேர் முதலிடத்தை பிடித்தனர்;இரண்டாம் இடம் 125 பேர் ! 321 பேர் மூன்றாம் இடம் !!!


* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

 *125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்

 *321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்

 *முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்

 *முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

 *மாணவர் தேர்ச்சி விகிதம் 90.7சதவீதம்

10th Result : மாவட்ட வாாியாக தேர்ச்சி சதவீதம்


                  10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.

                    இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது
                   .பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

 வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

 மாவட்டம்  /  தேர்ச்சி  விகிதம் (%)   /   பள்ளிகளின் எண்ணிக்கை 

ஈரோடு 97.88   334
கன்னியாகுமரி 97. 78    391
 நாமக்கல் 96. 58    298
 விருதுநகர் 96. 55    325
 கோயம்பத்தூர் 95. 6   502
 கிருஷ்ணகிரி 94.58    356
 திருப்பூர் 94.38   312
 தூத்துக்குடி 94.22   278
 சிவகங்கை 93.44    256
 சென்னை 93.42   589
 மதுரை 93.13   449
 ராமநாதபுரம் 93.11   227
 கரூர் 92.71   180
 ஊட்டி 92.69   177
 தஞ்சாவூர் 92.59   390
 திருச்சி 92.45   396
 பெரம்பலூர் 92.33   124
 திருநெல்வேலி 91.98    448
 சேலம் 91.89   473
 புதுச்சேரி 91.69   279
 தர்மபுரி 91.66   285
 புதுக்கோட்டை 90.48   295
 திண்டுக்கல் 89.84    317
 திருவள்ளூர் 89.19   580
 காஞ்சிபுரம் 89.17   565
 தேனி 87.66   184
 வேலூர் 87.35   566
 அரியலூர் 84.18   149
 திருவாரூர் 84.13   203
 கடலூர் 83.71   385
 விழுப்புரம் 82.66   534
 நாகப்பட்டினம் 82.28   263
 திருவண்ணாமலை 77.84    450

Thursday, 22 May 2014

நாளை எஸ்.எஸ.எல்.சி. தேர்வு முடிவுகள் !!!



சென்னை  
                       தமிழகத்தில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப் படுகிறது. தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதள முகவரி களில் மதிப்பெண் விவரங் களுடன் அறிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

Wednesday, 14 May 2014

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம் !!!



                                    

      SCHOOL FREE BUS PASS DOWNLOADS
S.NOFILE NAMEDOWNLOAD
1Application FormClick Here
2InstructionClick Here
3Soft Copy FormatClick Here
4Delivery ChallanClick Here

கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு !!!


                        நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது. 

                        இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர், பாடப் பிரிவு, நேர்முகத் தேர்வு நாள் ஆகிய விவரங்கள் கேந்திரீய வித்யாலயா இணையதளத்தில் (www.kvsangathan.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம், பயோடேட்டா, உறுதிமொழி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கேந்திரீய வித்யாலயா அமைப்பின் இணை ஆணையர் (நிர்வாகம்) தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு? !!!


                CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். 

                  12ம் வகுப்பு தேர்வை 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்சி தேர்வுகள் முடிந்து, 2 மாதங்கள் அல்லது 45 நாட்களுக்கு பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.ஆனால், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு, விடைத்தாள் திருத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தென் மண்டலத்துக்கான தேர்வு முடிகள் மே 27 மற்றும் 28ம் தேதிகளில் வெளியானது.இந்த ஆண்டும் அது போலவே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

Monday, 12 May 2014

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்!!!


                ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும்,  தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?


                            பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்) 


                           ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறு விண்ணப்பிப்பது? பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ மற்றும்’ ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/ வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும். 

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்