Saturday, 26 April 2014

மே 9-ல் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் வலைத்தள முகவரிகள் !!!


                          மே 9-ம் தேதி வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அன்றைய தினம் அறிந்துகொள்வதற்கான வலைத்தளங்களின் முகவரிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வலைத்தள முகவரிகள்:
www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in

ஸ்மார்ட் போன்களில் முடிவுகளை அறிய

http://www.dge1.tn.nic.in 

என்ற வலைத்தளத்தை நாடலாம்.

                          மே 9-ம் தேதி காலை 10 மணி முதல் 092822 32585 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வு !!!


                          ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

                        தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். 

                      இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். 

                     தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

 இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

 ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை
ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,                                          மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2
ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2
 ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2
ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2
ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

 முதலாமாண்டு தேர்வு அட்டவணை: 

 ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை
 ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1 ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1
ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1
ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1
ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1
ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம் !!!


                          தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

                         முன்னதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த 3 நாள் பயிற்சியில் பங்கேற்ற பல ஆசிரியர்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை. இதுதவிர தேர்தலுக்கு முதல்நாள் இரவுதான் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேர்தல் பணிக்கான இடங்களை கண்டுபிடித்து செல்வதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். கலெக்டர்கள் வழங்கிய உத்தரவில் பல குழப்பங்கள் இருந்ததால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திரும்பினர். மேலும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடவசதியும் செய்யப்படவில்லை. உணவும் பிரச்னைதான். 

                              இதேபோல தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் படிவம் 12பி மற்றும் 12 படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யவில்லை என்ற குறை உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இதுபோல் பாதிக்கப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து பயிற்சிக்கான பணம் வழங்கவும், தபால் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    மேலும் பணி முடித்து ஊர் திரும்பும் போது அரக்கோணத்தைச் சேர்ந்த ஆசிாியை திருமதி.                         என்பவர் இரயில் ஏறும் போது தவறி விழுந்து மரணமடைந்தார். எனவே இது போன்ற பணியின் போது ஆசிாியர்களுக்கு உாிய வசதி செய்து தர வேண்டும் என ஆசிாியப் பெருமக்கள் பொிதும்   எதிர்பார்க்கின்றனர்.


பிளஸ் 2 விடைத்தாள் நகல் !!!








தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும் !!!


                 தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள்எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம்கூறியுள்ளது. 

                        வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது, மேலும் வேட்பாளர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தில்லியிலிருந்து வரும் தேர்தல் பார்வையாளர்களை வேட்பாளர் செலவுக் கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 2,518 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குகளில், மே 16ம் தேதிக்குள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு !!!


                        திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                       தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும்.

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்