Saturday, 29 March 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்


                           பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

                           கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும். தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள் இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும் ஆசிரியரே அதற்கான ‘டம்மி’ எண் போட்டு திருத்த வேண் டிய நிலையில் உள்ளனர்.

                      பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து ‘டம்மி’ எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால் குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் திணறல் காணப்பட்டது. ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.

பள்ளி கல்வி துறை : ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை அறிவிப்பு !!!


                        ஏப்ரல் 23 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிகல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16 : பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவு

ஏப்ரல் 17 : பெரிய வியாழன் விடுமுறை

ஏப்ரல் 18 : புனிதவெள்ளி விடுமுறை

ஏப்ரல் 19 : சனி விடுமுறை

ஏப்ரல் 20 : ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 21 : பள்ளி வேலை நாள்

ஏப்ரல் 22 : பள்ளி வேலைநாள்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10 முதல் 19 வரை நடைபெறவுள்ளது

                          பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. 

                           பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                          இந்த மையங்களை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளிகளின் மூலமாக 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதி வருகின்றனர்.


                           மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பயிற்சி காரணமாக ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் மதிப்பீடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாட விடைத்தாள்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள்: 

                          மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை, ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகின்றன இந்த வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

                            இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு தயாராக உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்தமாக வினாத்தாள்களை எடுத்து வருவதற்குப் பதிலாக ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வினாத்தாள் காப்பு மையங்களிலிருந்து வினாத்தாள்கள் எடுத்துவரப்பட உள்ளன.

Saturday, 15 March 2014

அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்வு துறை: முறைகேடுகளுக்கு இனி வாய்ப்பில்லை!!!


                     பொதுத் தேர்வு திட்டங்களில், முறைகேடுகளுக்கு வழிவிட்ட ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய திட்டங்கள் மூலம், முழுமையாக அடைத்து, தேர்வுத் துறை சாதனை படைத்துள்ளது. துறையின் நடவடிக்கைக்கு, மாணவர் மட்டும் அல்லாமல், ஆசிரியர் அமைப்புகளும், வரவேற்பு தெரிவித்துள்ளன.

                    கடந்த ஆண்டு வரை, தேர்வுத் துறை, கலவர துறையாக இருந்தது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், குழப்பம் இன்றி முடியுமா என்பதில், தேர்வுத் துறைக்கே சந்தேகம் இருந்தது. கேள்வித் தாளில், குளறுபடியான கேள்விகள் கேட்பதில் துவங்கி, விடைத்தாள்களை, பத்திரமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு சேர்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது வரை, ஒரே பதற்றம் தான்! இந்த ஆண்டு, கடந்த, 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வு, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து வருகிறது. ஒவ்வொரு பணியும், திட்டமிட்டபடி சரியாக நடப்பது, தேர்வுத்துறைக்கு, மகிழ்ச்சியை தந்துள்ளது. 

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டறிய.....

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டறிய.....

இங்கே சொடுக்கவும்......

Saturday, 8 March 2014

TNPSC Group IV Mark and Rank


Posts included in GROUP-IV Services, 2013 - 2014
 (Date of Written Examination:25.08.2013) 
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION


50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!


                   மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                     புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும், அதற்கு முன்பு ஒப்புக் கொண்டபடி 10 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் உடனடியாக சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவினர் அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்விற்கான கால அட்டவணை அறிவிப்பு !!!

                   பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

 தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி முடிவடைகிறது.

ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் என  பள்ளி  கல்வித்துறை  அறிவிப்பு .

Standards VI to VIII
Forenoon Session 10 a.m to 12.30 p.m
DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language
8.04.2014
Tuesday
English
10.04.2014
Thursday
Mathematics
11.04.2014
Friday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science


3rd Term Summative AssessmentExamination
Standards IX
Afternoon Session 2.00 p.m to 4.30 p.m
DATE
DAY
SUBJECTS
3.04.2014
Thursday
Language Paper I
8.04.2014
Tuesday
Language Paper II
9.04.2014
Wednesday
English Paper I
10.04.2014
Thursday
English Paper II
11.04.2014
Friday
Mathematics
12.04.2014
Saturday
E.V.S/P.E.T
15.04.2014
Tuesday
Science
16.04.2014
Wednesday
Social Science

Practical Examination for Standard IX should be conducted before 25 March 2014

Saturday, 1 March 2014

விதிமுறைகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் நியமனம்? யு.ஜி.சி.,க்கு உத்தரவு !!!


                       வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

                       ஓய்வுபெற்ற பேராசிரியர், இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், "யு.ஜி.சி., விதிமுறைகளை பின்பற்றாமல், ஆசிரியர்களை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. நிபுணர்களை நியமித்து ஆசிரியர்களின் தகுதி பற்றி, ஆய்வு செய்யுமாறு யு.ஜி.சி.,க்கு உத்தரவிட வேண்டும். யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. 

                      தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி ரவிச்சந்திரபாபு அடங்கிய, முதல் பெஞ்ச் மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சத்தியசந்திரன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர். விதிமுறைகளை மீறி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனரா என்பதை, ஆராய வேண்டிய பொறுப்பு, யு.ஜி.சி.,க்கு உள்ளது. எனவே, யு.ஜி.சி., ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆய்வின் போது, சரிபார்ப்பு நடவடிக்கைக்காக, தேவையான ஆவணங்களை, திருவள்ளுவர் பல்கலைகழகம் வழங்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்துடன் டிஏ இணைப்பு 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு !!!


                        புதுடெல்லி, மார்ச் 1& மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய பணியாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
                        
                        பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

TNPSC துறை தேர்வுகள் மே -2014 அறிவிப்பு !!!



TNPSC துறை தேர்வுகள் மே -2014 அறிவிப்பு. 

விண்ணபிக்க இறுதி தேதி -31.03.2014


TNPSC DEPARTMENTAL EXAMINATION  MAY 2014 NOTIFICATION

APPLY ONLINE ONLY (APPLICATION FORMS WILL NOT BE SUPPLIED BY THE COMMISSION)
Name of the Examination  :  Departmental Examinations - May 2014
Date of Notification          :  01.03.2014
Date and Time of closing  :  31.03.2014  at  5.45 p.m
Date of Examinations       :   24.05.2014  to  31.05.2014


உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்